Karthigai deepam: ரம்யாவை அறைந்த கார்த்திக்.. சடாரென்று பாய்ந்த குண்டு - கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ரம்யாவை அறைந்த கார்த்திக்.. சடாரென்று பாய்ந்த குண்டு - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: ரம்யாவை அறைந்த கார்த்திக்.. சடாரென்று பாய்ந்த குண்டு - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 02, 2024 04:53 PM IST

Karthigai deepam: ‘எனக்கு கல்யாணம் ஆகும் போது, ஏன் அம்மா இப்படி பண்ணாங்க, இப்போ என் அம்மாவை போலவே நீங்களும் எனக்காக இப்படி பண்றீங்க என்று வருத்தப்படுகிறாள்’ - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: ரம்யாவை அறைந்த கார்த்திக்.. சடாரென்று பாய்ந்த குண்டு - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: ரம்யாவை அறைந்த கார்த்திக்.. சடாரென்று பாய்ந்த குண்டு - கார்த்திகை தீபம் அப்டேட்!

ரம்யாவை அறைந்த கார்த்திக்! 

அதாவது, அபிராமி கோயிலுக்கு வருபவர்களின் காலை கழுவி பரிகாரம் செய்து கொண்டிருக்க, தீபாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. இதனையடுத்து, ஓடி வந்து அபிராமியிடம் எதுக்கு அத்தை இப்படியெல்லாம் செய்யறீங்க என்று கேட்டு வருத்தப்படுகிறாள்.

எனக்கு கல்யாணம் ஆகும் போது, ஏன் அம்மா இப்படி பண்ணாங்க, இப்போ என் அம்மாவை போலவே நீங்களும் எனக்காக இப்படி பண்றீங்க என்று வருத்தப்படுகிறாள். இதை தொடர்ந்து ரம்யாவின் அப்பா கார்த்திக்கை வர வைத்து, ரம்யா அவன் மீது காதலுடன் இருக்கும் விஷயத்தையும், டைரியில் இது குறித்து எழுதி வைத்திருந்த விஷயத்தையும் சொல்லி விட்டார். இதனால் கடுப்பாகும் கார்த்திக் ரம்யா வீட்டிற்கு வந்து அவளை அறைகிறான்.

ரம்யா, ஆமா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். அதுக்கு தான் இப்படி பண்ணேன் என்று சொன்னாள். இதுக்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கு என்று கேட்க, ரம்யாவின் அப்பாவும் போலீசும் உள்ளே வருகின்றனர். போலீஸ் ரம்யாவை கைது செய்ய போவதாக சொல்ல, ரம்யா போலீஸ் துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டு கொள்கிறாள்.

அதிர்ச்சியில் உறைந்த ரம்யா அப்பா! 

இதனால் ரம்யாவின் அப்பா அதிர்ச்சி அடைய, இறுதியில் இது அவருடைய கனவு என தெரிய வருகிறது. இதனால் கார்த்திக்கிடம் உண்மையை சொல்ல வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். ஆனால் கார்த்திக் அவர் சொன்னதால் வீட்டிற்கு வந்து விட, உங்களுக்கு மாற்றி போன் செய்து விட்டதாக சமாளித்து விடுகிறார்.

அதன் பிறகு கார்த்திக், தீபா கோயிலுக்கு வருகிறார்கள். கார்த்திக் காரை பார்க் செய்து விட்டு வர போன கேப்பில், தலையில் இருந்த பூவை எடுத்து விட்டு கார்த்திக் வந்ததும், பூ வாங்கி வைத்து விட சொல்கிறாள்

கார்த்திக் உங்க தலையில் ஏற்கனேவே பூ இருந்ததே என்று கேட்க தீபா இல்லை என்று சொல்கிறாள்.பூ கடைக்காரர் அந்த பொண்ணு உங்க கையால் பூ வச்சுக்கணும்னு ஆசைப்படுத்து வாங்கி வச்சி விடுங்க என்று சொல்கிறார். 

இதையடுத்து, கார்த்திக் தீபாவுக்கு பூ வைத்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.