Karthigai Deepam: ‘குறட்டையால் அவதிப்பட்ட கார்த்திக்.. நள்ளிரவில் ரம்யா கொடுத்த குல்பி! - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: ஒரு பக்கம் கார்த்திக் பஞ்சை தூக்கி போட, தீபா தலையணைகளை எடுத்து விட்டாள். அதன் பிறகு நடு இரவில், ஆனந்த் குறட்டை விட ஆரம்பித்து விட்டான். - கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் மற்றும் தீபாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததை தொடர்ந்து, இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்
தீபாவை தீர்த்துக்கட்டி விடலாம்
அதாவது, ரம்யா நேரில் ரியா இருக்கும் இடத்திற்கு வந்து, நிச்சயதார்த்தம் நடந்த விஷயத்தை சொல்லி, எனக்கு எப்படியாவது கார்த்திக்கை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறாள். அதற்கு ரியா, நீ கவலையே படாத; தீபாவை எப்படியாவது போட்டுக் தள்ளிடலாம் என்று ஐடியா கொடுக்கிறாள்.
மறுபக்கம் அபிராமி, வீட்டில் இன்னும் பத்து நாட்களில், கார்த்திக் தீபாவுக்கு கல்யாணம் என்பதால், அதுவரை அவர்கள் தனித்தனியாகதான் இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். இதனால் கார்த்திக்குடன், ஆனந்தையும் மீனாட்சி உடன் தீபாவையும் படுத்துக் கொள்ள சொல்கின்றனர்.