தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: அடுத்த நாச்சியாராக உருவெடுத்த தீபா.. பால் காய்ச்ச முதல் உரிமை.. - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai deepam: அடுத்த நாச்சியாராக உருவெடுத்த தீபா.. பால் காய்ச்ச முதல் உரிமை.. - கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
May 22, 2024 03:08 PM IST

Karthigai Deepam: பழைய வீட்டை சுத்தம் செய்து, டெக்கரேட் செய்து அடுத்த நாச்சியாராக பார்க்க படும் தீபாவை வைத்து, பாலை காய்ச்ச வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். அதற்கேற்றார் போல தீபாவும் பாலை காய்ச்ச, அனைவரும் அதை பார்த்து சந்தோசப்படுகின்றனர். - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai deepam: அடுத்த நாச்சியாராக உருவெடுத்த தீபா.. பால் காய்ச்ச முதல் உரிமை.. - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai deepam: அடுத்த நாச்சியாராக உருவெடுத்த தீபா.. பால் காய்ச்ச முதல் உரிமை.. - கார்த்திகை தீபம் அப்டேட்

ட்ரெண்டிங் செய்திகள்

வேறு வீட்டிற்கு மாறிய குடும்பம்: 

 

வீட்டிற்கு வந்த ரம்யா கார்த்திக் சட்டையை முகர்ந்து பார்த்து, ஆட்டம் பாட்டம் என ரொம்ப சந்தோசமாக உணர்கிறாள். மறுபக்கம், அபிராமி குடும்பத்தினர் எல்லோரும் ஜோசியர் சொன்னபடி வீடு மாறுகின்றனர். பழைய வீட்டை சுத்தம் செய்து, டெக்கரேட் செய்து அடுத்த நாச்சியாராக பார்க்க படும் தீபாவை வைத்து, பாலை காய்ச்ச வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். அதற்கேற்றார் போல தீபாவும் பாலை காய்ச்ச, அனைவரும் அதை பார்த்து சந்தோசப்படுகின்றனர்.

இதனை தொடர்ந்து கார்த்திக், தீபா திருமண நாள் கொண்டாட்டத்தை நாளைக்கே வச்சிக்கலாம் என்று முடிவெடுக்கின்றனர். அபிராமி தீபாவிடம் கார்த்திக்கு என்ன கிஃப்ட் கொடுக்க போற என்று கேட்க, தீபா இன்னும் முடிவு பண்ணல அத்தை என்று சொல்கிறாள். அடுத்து கார்த்தியிடம் நீ என்ன பா கிஃப்ட் கொடுக்க போற என்று கேட்கின்றனர். அவனும் என்ன கொடுக்கிறதுனு இன்னும் முடிவு பண்ணல என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன தெரியுமா? 

 

அபிராமி ஜோசியர் இப்படி சொன்னதால், கொஞ்ச நாளைக்கு இந்த வீட்டில் இருக்க வேண்டாம், பழைய வீட்டிற்கு போகலாம், அந்த வீட்டை ரெடி பண்ண சொல்லுங்க என்று சொன்னாள். அதை தொடர்ந்து, ஐஸ்வர்யா கொத்தனாரையும் பாம்பை விட்டவனையும் வர வைத்து, சொன்ன வேலையை கச்சிதமா முடிச்சிடீங்க, இந்தாங்க பணம் என்று கொடுத்து அனுப்பினாள். 

மறுபக்கம் ரம்யா, கார்த்திக் பெயரில் கிஃப்டாக வந்த புடவையை அணிந்து, அப்பாவிடம் காட்டி சந்தோசப்பட்டாள். பிறகு அதே புடவையில், கம்பெனிக்கு வந்து கார்த்திக் முன்னாடி நடந்து காட்டி சந்தோசப்பட்டாள். ஆனால், கார்த்திக் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தான். பிறகு ரம்யா ரவுண்ட்ஸ் போகும் போது, அவளது சேலை மிஷின் ஒன்றில் மாட்டி கொள்ள, கார்த்திக் ரம்யாவை காப்பாற்றி, அவளுக்கு தன்னுடைய சட்டையை கழட்டி கொடுத்தான். 

கடுப்பாகிய தீபா

 

இதனால் ரம்யாவுக்கு கார்த்திக் மீது காதல் அதிகமாக, அவள் அந்த சட்டையை முகர்ந்து பார்த்து சந்தோசப்பட்டாள். பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர, தீபா சட்டையை பற்றிக் கேட்டாள். கார்த்திக் நடந்ததைச் சொல்ல, நீங்க எப்படி உங்க சட்டையை கழட்டி கொடுக்கலாம். ஒரு ஆம்பளையோட சட்டையை ஒன்னு தங்கச்சி போடணும், இல்லனா பொண்டாட்டி போடணும் என்று கோபப்பட்டாள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்