Tamil News  /  Entertainment  /  Zee Tamil Karthigai Deepam Latest Episode Today Update

Karthigai Deepam: வெள்ளை புடவையால் வந்த வினை.. கொந்தளித்த அபிராமி.. திக்கி நிற்கும் தீபா! - கா., தீ அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 06, 2024 02:53 PM IST

வெள்ளை புடவையால் வெடித்த பிரச்சனை.. அவமானப்பட்ட அபிராமி கொடுத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் அபிராமியும் கல்யாண வீட்டிற்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பதை பார்க்கலாம். 

இருவரும் கல்யாண வீட்டிற்கு வர, அங்கிருந்தவர்கள் பகையை எதுவும் மனதில் வைச்சிக்காம வந்திருக்கீங்க என்று வரவேற்று நலங்கு வைக்க சொல்கின்றனர்

இவர்களும் நலங்கு வைத்து அந்த பெண்ணிற்காக எடுத்த புடவையை கொடுக்க, அதை வாங்கி பிரித்த கல்யாண பெண், வெள்ளை புடவையும் விபூதியும் இருப்பதை பார்த்து பயத்தில் கீழே போட்டு விட்டாள். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

நீ பழைய பகையை மனசில் வச்சி தான் இப்படி கீழ்த்தரமான வேலை பண்ணிருக்க என்று அபிராமியை திட்டி வெளியே துரத்த, தீபா கண் கலங்கி நிற்கிறாள், 

அபிராமி நீ கோயிலில் விளக்கு போடலைனு திட்டினதுனால தான் இப்படி பண்ணி இருக்கே என்று தீபாவை திட்டுகிறாள். 

இனிமே நீ, நான் குடிக்க தண்ணி கூட கொடுக்க கூடாது என்று ஆவேசப்படுகிறாள். இங்கே நடந்த விஷயம் எதுவும் கார்த்திக்கு தெரியவும் கூடாது என கண்டிஷன் போடுகிறாள்.

ஆனால், கல்யாண வீட்டில் இருந்த கார்த்தியின் பெரியம்மா ஒருவர் கார்த்திக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்லி, எனக்கு என்னமோ தீபா மேல தப்பு இருக்க மாதிரி தெரியல, அபிராமியும் இப்படி செய்ய கூடிய ஆள் கிடையாது, ஏதோ தப்பா நடந்திருக்கு என்று சொல்ல, நான் பார்த்துக்கறேன் என்று கார்த்திக் போனை வைக்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.