Tamil Serials: மாயாவின் கள்ளதொடர்பு.. கையை அறுத்துக்கொண்ட கவின்! - கார்த்திகை தீபம், கெட்டி மேளம் சீரியல்களில் இன்று!
Tamil Serials: கெட்டி மேளம் மற்றும் கார்த்திகை தீபம் சீரியல்களில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்தான விபரங்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.

Tamil Serials: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ரேவதி பரமேஸ்வரி பாட்டியை சந்தித்து பேசியதை பார்த்து, சாமுண்டீஸ்வரி கோபமான நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க!
ரோகிணியும் ரேவதியை திட்டினாள்.
சாமுண்டீஸ்வரி ரேவதியை வீட்டிற்கு அழைத்து வந்து கோபப்படுகிறாள். ரோகிணியும் ரேவதியை திட்ட, கடைசி பெண் சுவாதி மட்டும் என்னையும் கூப்பிட்டு இருந்தா, நானும் பாட்டியை பார்க்க வந்திருப்பேன் என்று ஆறுதல் சொல்கிறாள்.
இன்னொரு பக்கம், டாக்டர் மல்லிகாவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டு, கடந்த 1 மாதமாக கட்டு போட்டு இருந்த நிலையில், தற்போது டாக்டர் ஒருவர் வீட்டிற்கு வந்து, மல்லிகாவின் கட்டை அவிழ்க்கிறார்.
துப்பாக்கியை கையில் எடுத்த சாமுண்டீஸ்வரி
மகேஷ் மற்றும் மாயா தெரிந்தவர்களுக்கு பத்திரிக்கை கொடுத்து, கல்யாணத்திற்கு அழைத்து கொண்டிருக்க, அதே கோயிலுக்கு மல்லிகா டாக்டரும் வருகிறார். தொடர்ந்து மகேஷ், ரேவதி கல்யாணம் குறித்து அறியும் மல்லிகா டாக்டர், அதிர்ச்சி ஆகிறார்.
உடனே சாமுண்டீஸ்வரிக்கு போன் போட்டு வர சொல்லி, மாயா மகேஷ் இடையேயான கள்ளத்தொடர்பு குறித்தும், தான் செய்த விஷயத்தை குறித்தும், போட்டு உடைத்தாள். இதைக்கேட்ட சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். உடனே துப்பாக்கியை கையில் எடுத்து, சாமுண்டேஸ்வரி நேரகா மாயா வீட்டிற்கு வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், அஞ்சலியின் போன் நம்பரை வாங்கி கொண்ட மகேஷ், அவளை வீட்டில் ட்ராப் செய்து விட்டு கிளம்பிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்
கையை அறுத்த கவின்
அதாவது, அஞ்சலி வீட்டிற்கு வந்ததும், குடும்பத்தார் சார்பில் கேக் கட் செய்து, அவளது பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். ரகுராம், கேசவன் ஆகியோர் மாப்பிள்ளை என்ன சொன்னார்? என்ன செய்தார் என்று கேட்க, ம்ம்ம்… அதெல்லாம் அவங்க பர்சனல் என்று அஞ்சலியின் அண்ணிகள் துரத்தி விடுகின்றனர்.
இதை தொடர்ந்து அண்ணிகளும், லட்சுமியும் மாப்பிள்ளை என்ன செய்தார் என்று கேட்டு கலாய்க்கின்றனர். பிறகு அஞ்சலி கவினுக்கு எனக்கு பிறந்த நாள் மறந்துட்டியா என வாய்ஸ் மெசேஜ் அனுப்ப, அதை கேட்ட கவின் அவளுடனான நினைவுகளை நினைத்து பாட்டிலால் கையை அறுத்து கொண்டான். இதனையடுத்து, நண்பர்கள் கட்டு போட்டு விடுகின்றனர்.
இருவரும் இரவு முழுவதும்
அடுத்து மகேஷ் போன் செய்ய, வீட்டில் உள்ளவர்கள் மாப்பிளை போன் பன்றாரு பேசு என பேச வைக்க, இருவரும் இரவு முழுவதும் பேசுகின்றனர். அஞ்சலி அடுத்த நாள் அசந்து தூங்க, எல்லாரும் அவளை கலாய்க்கின்றனர்.
அடுத்ததாக கவின் கையில் காயத்துடன் சாப்பிட்டு கொண்டிருக்க, அப்பா வரதராஜன் என்னாச்சு என கேட்டு கோபப்பட்டு, சாப்பிடாமல் எழுந்து சென்று விடுகிறார். இங்கே அஞ்சலியின் திருமண பத்திரிகையான டிசைன்களை பார்க்க வேண்டிய வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அஞ்சலி வெளியே வர, அவளையே செலக்ட் செய்ய சொல்கின்றனர்.
ஆனால் அவள் விலை கம்மியானதை செலக்ட் செய்ய, விலையை பத்தியெல்லாம் கவலை படாதே என்று கூறிவிட்டனர். தொடர்ந்து அஞ்சலி ஒரு டிசைனை செலக்ட் செய்து கொடுக்கிறாள். கடையில் இருந்து ஆள் வந்து அட்வான்ஸ் கேட்க, அண்ணன்கள் ரெண்டு பேரும் நைசாக நழுவி கொள்கின்றனர்.
வெற்றி வெளியே வந்திருக்க, எம்.எல்.ஏ ப்ரோக்கரை வரவைத்து வெற்றிக்கு நல்ல பெண் பார்க்க சொல்கிறார். மேலும், பெண் அமைச்சர் வீட்டு பொண்ணா இருக்கணும் என்று சொல்ல, இதனை தொடர்ந்து வெற்றியின் அம்மா பொண்ணு என் பையனை விட 10 வயசு கம்மியா இருக்கணும்.. ஜாதக பொருத்தம் சரியாக இருக்கணும் என கண்டிஷன்களை லிஸ்ட் போடுகிறார்.
மேலும் வெற்றியின் அப்பா போன் செய்து போட்டோ கேட்க, வெற்றி போட்டோ தான் வீட்டில் இருக்குமே என்று சொல்ல, நல்ல போட்டோவா வேண்டும்.. பொண்ணு பார்க்க கொடுக்கணும் என்று சொல்ல வெற்றி ஷாக் ஆகிறான்.
இங்கே மகேஷ் போன் செய்து கல்யாணத்திற்கு ஷாப்பிங் போக கார் அனுப்பி வைப்பதாக சொல்கிறான். கார் வீட்டிற்கு வர எல்லாரும் ஷாப்பிங் கிளம்பி செல்கின்றனர். பிரம்மாண்டமான துணிக்கடையில் டிரஸ் எடுக்க மகேஷ் ஏற்பாடு செய்திருப்பதை பார்த்து எல்லாரும் பிரம்மித்து போகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வள்ளியின் வேலனை சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

டாபிக்ஸ்