Tamil Serials: நெஞ்சை பிழியும் உறவுகள்..பரபர திருப்புமுனைகள்.. ஜீ தமிழ் கார்த்திகை தீபம், அண்ணா சீரியல்களில் இன்று!
Tamil Serial: Tamil Serials: நெஞ்சை பிழியும் உறவுகள்..பரபர திருப்புமுனைகள்.. ஜீ தமிழ் கார்த்திகை தீபம், அண்ணா சீரியல்களில் இன்று!

Tamil Serials: கார்த்திக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்.. உண்மைகள் உடையுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், மயில்வாகனம் புடவையை மாற்றி வைக்க, அது ரேவதிக்கு தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ரேவதி நீங்க புடவை மாத்தி வச்ச விஷயம் எனக்கு தெரியும். எதுக்காக அப்படி செஞ்சீங்க என்று கேட்க, பரமேஸ்வரி பாட்டி தான் மாற்றி வைக்க சொன்னதாக சொல்கிறான். உடனே ரேவதி, எனக்கு பாட்டிக்கிட்ட பேசணும்; போன் நம்பர் கொடுங்க என்று சொல்லி வாங்கி கொள்கிறாள்.
அடுத்ததாக ரேவதி பரமேஸ்வரி பாட்டிக்கு போன் போட்டு, உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்லி, கோயிலில் சந்திக்கிறாள். தொடர்ந்து, எதுக்காக இப்படி பண்ணிங்க என்று கேட்க பாட்டி, நீ அந்த புடவையை கட்டிக்கிட்டு தான் கல்யாணம் பண்ணிக்கணும் என்று கூறினாள். அதற்கு ரேவதி நீங்களும் கண்டிப்பாக கல்யாணத்துக்கு வரணும் என்று கூப்பிடுகிறாள்.
அடுத்ததாக வீட்டில் சாமுண்டீஸ்வரி எல்லாருக்கும் பத்திரிகை கொடுத்தாச்சா என்று கேள்வி எழுப்ப, ரேவதிக்கு கார்த்தியின் அம்மாவுக்கு பத்திரிகை கொடுக்க வேண்டும் என்ற ஞாபகம் வருகிறது. இதைக் கேட்டு கார்த்திக் ஷாக் ஆகிறான்.
மேலும், சாமுண்டீஸ்வரி பத்திரிக்கை கொடுக்க தானும் வருவதாக சொல்ல, கார்த்திக் மேலும் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்தும் பார்த்து விடலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், பரணி சண்முகத்துடன் கிளினிக் கிளம்பிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கிளினிக் வந்த பரணி, சண்முகத்திடம் கோபப்படாமல், போய் டீ வாங்கிட்டு வா என சாதாரணமாக நடந்து கொள்ள, சண்முகம் குழப்பம் கொள்கிறான். மறுபக்கம் சௌந்தரபாண்டி வெங்கடேஷை பார்க்க, பரணி அமெரிக்கா போவது பத்தி அவன் என்ன முடிவு எடுத்திருக்கான் என்று கேட்கிறான். அதற்கு வெங்கடேஷ், அது அவங்க தனிப்பட்ட விஷயம், அதுல நான் என்ன செய்ய முடியும் என்று சொல்கிறான். அவங்க உன் வாழ்க்கையில தலையிடுறாங், அந்த மாதிரி நீ அவங்க வாழ்க்கையில தலையிடனும். அவங்க உன் பேச்சை கேட்கிற மாதிரி செய்யணும். பரணியும் சண்முகமும் பிரிந்தால்தான் உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கும் என்று ஏற்றி விடுகிறார்.
இதைத் தொடர்ந்து சம்மதம் கோவிலுக்கு வந்து வேண்ட, அவன் முன்பு தோன்றும் சூடாமணி பரணிய அமெரிக்க அனுப்பிடாத, அவ அமெரிக்கா போயிட்ட அந்த சவுந்தர பாண்டி குடும்பத்தை பிரித்து விடுவான் என்று சொல்கிறார்.
இங்கே வெங்கடேஷை ஏற்றி விட்ட சௌந்தரபாண்டி, நேராக ஸ்டேஷனுக்கு வந்து முத்துப்பாண்டியை சந்தித்து, அந்த சண்முகம் அவன் தங்கச்சிக்காக என்னென்ன பண்றான் நீ உன் தங்கச்சிக்காக எதுவும் பண்ண மாட்டியா? பரணியை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கிற வழிய பாரு என்று கூறினான். இதைக்கேட்ட முத்துப்பாண்டி யோசிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

டாபிக்ஸ்