தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tamil Karthigai Deebam Today Episode Update

Karthigai Deebam: மீண்டும் துரோக வகையில் தீபா… என்ன செய்ய போகிறார் கார்த்தி?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 23, 2024 03:10 PM IST

கார்த்திக் வீசிய வலையில் சிக்க போகும் தீபா.. ரூபஸ்ரீக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், இளையராஜா கோகிலாவிற்கு பணத்தாசை காண்பித்து தூக்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பதை பார்க்கலாம்.

பல்லவி வந்து பாடியே ஆகணும் இல்லனா… கோகிலாவை விடமாட்டோம் என்று சொல்லி மிரட்ட, ரூபஸ்ரீ அதிர்ச்சி அடைகிறாள். 

உடனே தீபாவுக்கு போன் போட்டு இந்த ஒரே ஒரு முறை மட்டும் பாடி கொடு என்று கெஞ்ச, தீபா இனிமே அவர ஏமாத்திட்டு வந்து நான் பாட மாட்டேன் என மறுத்து விடுகிறாள். 

இது கார்த்திக்கு செய்ற பிராயசித்தமா இருக்கட்டும் இந்த ஒரு முறை மட்டும் பாடி கொடு என ரூபஸ்ரீ மறுபடியும் கெஞ்சி கூத்தாட, தீபா பாடுவதற்கு ஒப்புக்கொள்கிறாள்.

அத்துடன் பாட்டு பாடுவதற்காக கண் பார்வை அற்ற குழந்தைகளின் ஆசிரமத்திற்கு வர சொல்கிறாள். தீபாவும் அங்கு செல்ல, ரூபஸ்ரீ பல்லவியாக அறிமுகம் செய்து வைக்கிறாள்.

குழந்தைகள் எல்லோரும் தீபாவின் கையைப் பிடித்து உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு.. உங்க பாட்டு எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என பேசுகின்றனர். 

வீட்டுக்கு வரும் தீபா மீனாட்சியிடம், ரூபஸ்ரீக்காக பாட போகும் விஷயத்தை சொல்கிறா ள். 

அதற்கு மீனாட்சி வேண்டாம் நீ போகாத என்று சொல்ல தீபா இந்த ஒரு முறை பாடி கொடுக்கிறேன் என கோரிக்கை வைக்கிறாள்.

அடுத்ததாக வீட்டுக்கு கெஸ்ட் வர அபிராமி அவர்களை அழைத்து உட்கார வைத்து உபசரிக்கிறார். கல்யாணத்துக்காக பத்திரிகை வைக்க வந்திருந்த அவர்களிடம் உங்க பொண்ணோட கல்யாண புடவையை நான் தான் எடுத்து கொடுப்பேன் என சொல்கிறார். 

அதன் பிறகு தன்னுடைய மருமகள்கள் என ஐஸ்வர்யா மற்றும் மீனாட்சி அறிமுகம் செய்யும் அபிராமி, தீபாவை அறிமுகம் செய்யும்போது கார்த்தியோட பொண்டாட்டி என சொல்கிறாள்.

இதனால் தீபா வருத்தப்பட்டு நிற்க கார்த்திக் அம்மா சொன்னது நெனச்சு கவலைப்படுறீங்களா என்று ஆறுதல் கூறுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்க ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம். 

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.