Karthigai Deebam: தற்கொலைக்கு முயன்ற ரியா.. அதிர்ச்சியின் உச்சத்தில் ஆனந்த்.. வதந்தியால் நிலைகுலைந்த தீபா!
கண்ணீருடன் தீபா, கார்த்திக் கொடுத்த மோட்டிவேஷன்.. ஹாஸ்பிடலில் தர்மலிங்கம் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பேப்பரில் மியூசிக் டைரக்டருக்கும், தீபாவிற்கு தொடர்பு என வந்த செய்தியை பார்த்து அபிராமி பயங்கர கடுப்பாகிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கார்த்திக் தீபா மேல தப்பு இருக்க வாய்ப்பில்ல, அவங்க நடந்தது எல்லாத்தையும் என்கிட்டே சொன்னாங்க. ரக்ஷன் டிராப் பண்ண தான் வந்தாரு என்று தீபாவுக்கு ஆதரவாக பேச, அபிராமி ஜோசியர் சொன்னதை நினைத்து பார்த்து எதுவும் பேசாமல் அமைதியாகி விடுகிறாள்.
இதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவும், ராஜேஸ்வரியும் சேர்ந்து அபிராமியை ஏற்றி விட, அபிராமி இதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?? உங்க வேலையை மட்டும் பாருங்க என்று திட்டி விடுகிறாள். இது மட்டுமல்லாமல் தீபாவுக்கு எதிரா கொளுத்தி போடுறது தான் உங்க வேலையா என்று கோபப்படுகிறாள்.
மறுபக்கம் தீபா ரூமுக்குள் சென்று எனக்கு இந்த பாட்டும் வேணா, புகழும் வேண்டா என்றும் கண்ணீர் விட்டு அழ, கார்த்திக் இதெல்லாம் நீங்க பாட கூடாதுனு நடக்குற சதி, இதற்கெல்லாம் கவலை பட்டு உட்கார கூடாது.
நீங்க பாடணும், உங்க பாட்டால் ஜெயித்து காட்டணும் என மோட்டிவேஷனலாக பேச, தீபா கடைசியாக பாடுறேன் என்று சம்மதம் சொல்கிறாள்.
மறுபக்கம் தர்மலிங்கம் உடம்பு முடியாமல் ஹாஸ்பிடல் வர, அவருக்கு மைல்டு அட்டாக் என்பது தெரிய வருகிறது. டாக்டர்கள் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்ல, தர்மலிங்கம் இப்போதைக்கு பணம் இல்ல, 4 மாசம் கழிச்சி ஆபரேஷன் செய்துகிறேன். இப்போதைக்கு மருந்து மாத்திரை மட்டும் எழுதி கொடுக்க சொல்கிறார்.
அடுத்து ஆனந்த் போனை ஆன் பண்ண, ரியா 150 முறை போன் செய்திருக்கும் விஷயம் தெரிய வருகிறது. மேலும் ஒரு புது நம்பரில் இருந்து போன் வர, ஆனந்த் எடுத்து பேசுகிறான். அதில் ரியா சூசைட் அட்டென்ட் செய்து, ஹாஸ்பிடலில் இருப்பதாக சொல்ல ஆனந்த் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
டாபிக்ஸ்