Karthigai Deebam: துங்காவை ஊசியால் குத்திய ஷக்தி.. அருள் புரிந்த கடவுள முருகன்! - கார்த்திகை தீபம் அப்டேட்-zee tamil karthigai deebam serial latest today episode update on september 18 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deebam: துங்காவை ஊசியால் குத்திய ஷக்தி.. அருள் புரிந்த கடவுள முருகன்! - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deebam: துங்காவை ஊசியால் குத்திய ஷக்தி.. அருள் புரிந்த கடவுள முருகன்! - கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Sep 18, 2024 08:44 AM IST

Karthigai Deebam: அவளை துங்கா மடக்கி பிடித்து, கீதா குறித்து விசாரிக்க,அவள் கையில் இருந்த ஊசியை துங்கா காலில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி வருகிறாள். - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deebam: துங்காவை ஊசியால் குத்திய ஷக்தி.. அருள் புரிந்த முருகன்.. கண்ணீரில் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deebam: துங்காவை ஊசியால் குத்திய ஷக்தி.. அருள் புரிந்த முருகன்.. கண்ணீரில் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்

ஊசியால் குத்திய ஷக்தி

இறுதியாக நர்ஸ் ஷக்தி வீடு மட்டுமே பாக்கி இருக்கும் நிலையில் அவளை பார்க்க வருகின்றனர். அதே சமயத்தில் துங்காவும் அங்கு வர, ஷக்தி மெடிக்கல் ஷாப்பில் இருந்து மாத்திரை சிலவற்றை வாங்கிக்கொண்டு வருவதை அவன் பார்த்து விடுகிறான்.

இதையடுத்து அவளை துங்கா மடக்கி பிடித்து, கீதா குறித்து விசாரிக்க,அவள் கையில் இருந்த ஊசியை துங்கா காலில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி வருகிறாள்.

அடுத்து கார்த்திக் மற்றும் சரவணன் என இருவரும் ஷக்தி வீட்டிற்கு வந்து தீபா குறித்து விசாரிக்க, அவர்கள் துங்காவின் ஆட்கள் என நினைத்து ஷக்தி எனக்கு தெரியாது என்று சொல்லி விடுகிறாள். இதையடுத்து கார்த்திக் ஏமாற்றத்துடன் கிளம்பி கோயிலுக்கு வருகிறான்.

கடவுளிடம் வேண்டும் கார்த்திக்

அங்கு வந்த அவன் தீபா உயிரோட தான் இருக்கானு எனக்கு காட்டிட்ட.. அவ எங்க இருக்கானு எனக்கு காட்டிடு என்று வேண்டுகிறான். அப்போது, முருகன் வேஷம் போட்ட பையன் அங்கு வந்து, கார்த்திக்கு ஆறுதல் சொல்லி,நீ தொலைத்த பொருள் கிடைத்து விட்டதாக என்று கேட்க, கிடைத்து விடும் என கார்த்திக் சொல்கிறான்.

அதன் பிறகு கார்த்திக் வீட்டிற்கு வந்த உடன் கீதா, தீபா குறித்து விசாரிக்க கார்த்திக் தாலியை எடுத்து நீட்ட, தீபா உயிரோட தான் இருக்காங்களா, நல்ல விஷயம் என்று சொல்ல கார்த்திக் துங்கா யார் என்று கேட்க கீதா அதிர்ச்சி அடைகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.