Karthigai Deebam: 'ஆப்பு கண்ணுக்குத் தெரியாது மாப்பு.. ரணமாகும் ரம்யா..! இன்றைய கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deebam: வான்டடாக வந்து சிக்கிய சேகர்.. அபிராமியால் ரம்யாவுக்கு ரெடியான ஆப்பு - கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்!

கார்த்திகை தீபம் அப்டேட்ஸ்!
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் குல்பி கேட்க தீபா ரம்யாவிடம் உதவி கேட்டு குல்பியை வாங்கி வர வைத்து கார்த்திக்கு கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, இருவரும் ஒன்று சேர்ந்து குல்பி சாப்பிட, அதன் பிறகு ரம்யா வீட்டில் காலிங் பெல் அடிக்கிறது. யார் என்று பார்க்க சென்ற போது, சேகர் நிற்பதை பார்த்து ஷாக் ஆகிறாள். அவன் ரம்யாவிடம் நீங்க கொடுத்த பணத்த சூதாட்டத்தில் விட்டுட்டேன். வெளியூர் போக பணம் கொடுங்க என்று கேட்க, ரம்யா பணத்தை கொடுத்து திட்டி அனுப்புகிறாள். இதை ரம்யாவின் அப்பா பார்த்து விடுகிறார்.
ஆப்பு வைத்த அபிராமி!
எதுக்கு பணம் கொடுத்த என்று கேட்க, ஆபிசில் அர்ஜென்ட் செலவு என்று சொல்லி சமாளிக்கிறாள். அடுத்ததாக அபிராமி சூப்பர் மார்க்கெட் வந்திருக்க, அங்கு கல்யாண வேலைகளை கவனிக்க ஆட்கள் வேண்டும் என்று பேசி கொண்டிருக்கிறாள். இதை கேட்ட சேகர், வெளியூர் போனால் செலவு ஆகும். இவங்க வீட்டிற்கு வேலைக்கு போய்ட்டா பணமும் கிடைக்கும், வீட்டுக்குள்ளேவே இருக்கலாம் என்று முடிவெடுக்கிறான்.
உடனே அபிராமியிடம் தனக்கு ஒரு வேலை போட்டு தர சொல்லி கேட்க, அபிராமி அவனை வீட்டிற்கு அழைத்து கொண்டு கிளம்புகிறாள். மறுபக்கம் கார்த்திக் வீட்டிற்கு வந்திருந்த போலீஸ், அதிகாரிகளிடம் சாமியார் கெட்டப்பே போலியா இருந்தா என்ன செய்வது என்று சொல்ல, அவனை தாடி மீசை இல்லாமல் வரைந்து பார்க்கலாம் என்று முடிவெடுக்கின்றனர்.
பிறகு அவனை வரைந்தும் முடிக்கும் நேரத்தில், அபிராமி சேகருடன் வீட்டிற்கு வர, ரம்யா இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இவனை வேலைக்கு எடுத்திருப்பதாக அறிமுகம் செய்து உள்ளே செல்ல ரம்யா நீ யார் வீட்டிற்கு வந்திருக்க தெரியுமா? இது கார்த்தியோட வீடு. உன்னை கூட்டிட்டு வந்தவங்க கார்த்தியோட அம்மா என்று சொல்லி திட்டுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்