Karthigai Deebam: உயிருக்கு உலை வைக்கும் ரம்யா.. வெள்ளந்தியாய் நிற்கும் தீபா - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deebam: அபிராமி வீட்டு சொத்தை ஆட்டைய போட ஐஸ்வர்யா செய்த தில்லாலங்கடித்தனம், அருணுக்கு வந்த சந்தேகம் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்டை இங்கே பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்தி போட்டோகிராபரை பார்க்க சென்ற நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, கார்த்திக் போட்டோகிராபரை சந்திக்க சென்றபோது, ரியாவை பிடிக்க முயற்சி செய்தான். ஆனால், அது முடியாமல் போகிறது. மறுபக்கம் ரம்யா, தீபாவிடம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம் என்று சொல்ல, தீபா, நீ என்ன பேசுற? அத்தைக்காக நான் கண்டிப்பா இதை செஞ்சு தான் ஆகணும் என்று சொல்கிறாள்.
உடனே ரம்யா, உனக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பதில் சொல்றது என்று கேட்க, தீபா போனை எடுத்து, இந்த பரிகாரத்தை நான் விருப்பப்பட்டு தான் செய்கிறேன். இதுல எனக்கு எந்த பிரச்சினையை ஏற்பட்டாலும், அதற்கு நான் மட்டுமே பொறுப்பு என்று சொல்கிறாள். இதனையடுத்து, ரம்யா நம்ம ரூட்டு கிளியர் என சந்தோஷப்படுகிறாள்.
அருணுக்கு வந்த சந்தேகம்!
அடுத்ததாக, ஐஸ்வர்யா ரூமில் இருக்க, அருண் அவளை எழுந்து சென்று முகத்தை கழுவி விட்டு வருமாறு சொல்ல, அவள் சென்றாள். ஐஸ்வர்யா சென்றதும், தலையணை கீழே அச்சு வைத்த சோப்பு இருப்பதை பார்த்த அருண் சந்தேகப்படுகிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
மீனாட்சி, தீபாவுக்கு போன் செய்து நீ உஷாரா இரு தீபா, எனக்கு ஏதோ தப்பா படுது.. தாலி வேற இல்லாமல் இருக்க’ என்று சொல்லி போனை வைத்தாள்.
ரம்யா வீட்டிற்கு வர, அவரது அப்பா, அபிராமி குறித்து நலம் விசாரிப்பதோடு, அவங்களுக்கு நீ துணையாக இருக்கிறதை பார்க்கும் போது சந்தோசமாக இருப்பதாகவும் கூறினார்.
அடுத்து ரம்யா போலி சாமியார் சேகரை வர வைத்து, ’அந்த தீபாவை எப்படியாவது பரிகாரம் பண்ண வைக்கணும், நான் வேண்டாம் வேண்டாம்னு தான் சொல்லுவேன். ஆனால், நீ பேசுற பேச்சு, தீபாவை நான் பண்றேன்னு சம்மதம் சொல்ற வைக்குற மாதிரி இருக்கனும் என்று சொன்னாள். இந்த நேரம் பார்த்து, தீபா காலிங் பெல் அடிக்க ரம்யா அதிர்ச்சியாக, சேகர் ஒளிந்து கொள்கிறான்.
இதைத்தொடர்ந்து போட்டோகிராபர் சுரேஷ், கார்த்திக்கு போன் செய்து, ரியா தன்னை போன் செய்து மிரட்டுவதாகச் சொன்னதோடு, அந்த புட்டேஜ் தன்னிடம் இருக்கும் விஷயத்தையும் சொல்ல, கார்த்திக் நான் வந்து வாங்கிக்கறேன் என்று சொல்லி போனை வைத்துவிட்டு, சுரேஷை பார்க்க கிளம்பி வந்தான். அதேபோல், ஐஸ்வர்யா மற்றும் ரியா என இருவரும் முகத்தை மறைத்தபடி அங்கு வந்தனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்