தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deebam: ரியா எடுத்த துப்பாக்கி.. வேகம் எடுத்து தெறித்த குண்டுகள்.. கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deebam: ரியா எடுத்த துப்பாக்கி.. வேகம் எடுத்து தெறித்த குண்டுகள்.. கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Jun 18, 2024 02:04 PM IST

Karthigai Deebam: கார்த்தியை நோக்கி துப்பாக்கியை வைத்து, என்னை ஏத்துக்கோங்க உங்களை உயிரோட விட்டுடுறேன் என்று மிரட்டுகிறாள் - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deebam: ரியா எடுத்த துப்பாக்கி.. தெறித்த குண்டுகள்.. அலறிய அபிராமி.. பீச்சிய இரத்தம்.. - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deebam: ரியா எடுத்த துப்பாக்கி.. தெறித்த குண்டுகள்.. அலறிய அபிராமி.. பீச்சிய இரத்தம்.. - கார்த்திகை தீபம் அப்டேட்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனந்திற்கு தெரிய வந்த உண்மை 

ஆனந்திற்கு உண்மை தெரிந்த பிறகு, ரியா கையில் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, எல்லாரையும் பாய்ண்ட் அவுட் செய்து அதிர்ச்சி கொடுக்கிறாள். தொடர்ந்து, உங்கள் எல்லாரையும் பத்தி எனக்கு தெரியும் என்று பேச தொடங்குகிறாள். 

பிறகு கார்த்தியை நோக்கி துப்பாக்கியை வைத்து, என்னை ஏத்துக்கோங்க உங்களை உயிரோட விட்டுடுறேன் என்று மிரட்டுகிறாள். இதனால் எல்லாரும் பதற்றம் அடைய, கார்த்திக்கோ நீ செய்தது ரொம்ப தப்பு, உன்னை எங்களால் ஏத்துக்க முடியாது என்று சொல்கிறான். 

குண்டுகளை வாங்கிய அபிராமி -  நொடியில் காப்பாற்றப்பட்ட கார்த்திக்.. அதிர்ச்சியில் குடும்பம் 

என்னுடைய வாழ்க்கை இப்படி ஆக நீ தான் காரணம், அப்போ நீ தான் சாகனும் என்று சுட துணிகிறாள். இந்த சமயத்தில், அபிராமி ஓடி வந்து கார்த்தியை காப்பாற்றி, குண்டை தான் வாங்கி கொள்கிறாள். இதையடுத்து அபிராமியின் உடம்பில் மூன்று குண்டுகள் பாய, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

கார்த்திக், மீனாட்சியை அடைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து, ரவுடிகளுடன் சண்டையிட்டு அவளை காப்பாற்றி வெளியே அழைத்து வந்தான். மறுபக்கம் மண்டபத்தில் பரமேஸ்வரி பாட்டி வந்திருக்க, எல்லோரும் ஜோடி ஜோடியாக ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என முடிவு செய்து, தயாராக நின்றனர். ரியா, ஆனந்தத்துடன் சேர்ந்து ஆசீர்வாதம் வாங்க ரெடியாக நின்றான். 

பரமேஸ்வரி பாட்டி இருப்பதால், இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் 

பரமேஸ்வரி பாட்டி, ரியாவை பார்த்து யார் இது என்று கேள்வி கேட்க, அதற்கு தீபா அது ஆனந்த்தோட ஃப்ரெண்ட் என பிளேட்டை மாற்றி விட்டாள். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரியா, எதுவும் பேச முடியாமல் நிஅன் அதன் பிறகு, கார்த்திக் மீனாட்சியுடன் மண்டபத்திற்கு வந்து விட, ரியா பேரதிர்ச்சி அடைந்தாள். 

இதைத்தொடர்ந்து கார்த்திக் மற்றும் தீபா, ஆனந்தை தனியாக அழைத்து சென்று, ரியா மதுவிடம் பேசிய வீடியோவை காட்டி அவளை பற்றிய உண்மையை உடைத்தனர். மேலும், பரமேஸ்வரி பாட்டி இருப்பதால், இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் என்றும் கூறினர். இதனைக்கேட்ட ஆனந்த் அமைதியாக வெளியே வந்தான்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.