Karthigai Deebam:உப்புக் கரித்த அபிராமியின் பொங்கல்.. தவிடு பொடியான ஐஸ்வர்யாவின் திட்டம்! - கார்த்திகை தீபம் அப்டேட்!
அருணாச்சலத்தால் உருவான போட்டி.. அபிராமியை சரிய வைத்த தீபா - கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட் இங்கே!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், பொங்கல் விழாவிற்கு தீபா ஏற்பாடு செய்த கெஸ்ட்டுகளாக விவசாயிகளும் வியாபாரிகளும் வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
பொங்கல் வைக்க இன்னும் நேரம் இருக்கே, அதுவரைக்கும் எதுக்கு சும்மா இருக்கனும் எதாவது விளையாடலாம் என்று அருணாச்சலம் சொல்லி, நம்ம வீட்டு பெண்களை மட்டும் வச்சி மியூசிக் சேர் விளையாட்டு விளையாடலாம் என்று ஏற்பாடு செய்கிறார்.
தொடர்ந்து, விளையாட்டிற்கான ஏற்பாடுகள் தொடங்க ஒவ்வொருத்தராக வெளியேற கடைசியில், தீபா சேரை பிடிக்க அபிராமி சரிந்து கீழே விழுகிறாள்.
இருப்பினும் தீபா அபிராமியிடம் மன்னிப்பு கேட்க, நீ வேணும்னு தான் இப்படி பண்ணியிருப்ப என்று திட்டுகிறாள்.
அத்துடன், பொங்கல் வைக்கிற போட்டியில் உன்னை தோற்கடிக்கிறேன் என மனதுக்குள் சபதம் எடுக்கிறாள். அதன் பிறகு பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.
தீபா கார்த்திக்கிடம், நீங்க தான் நானும் அத்தையும் செய்யுற பொங்கலை சாப்பிட்டு பார்த்து எது நல்லா இருந்ததுனு சொல்லணும் என்று சொல்கிறாள்.
இதற்கிடையில் ஐஸ்வர்யா கல் உப்பை சர்க்கரை போல் தூள் செய்து, அதை சர்க்கரை பாட்டிலுக்கு மாற்றி, தீபா பொங்கல் செய்ய வைத்திருக்கும் பொருட்களில் வைத்து விடுகிறாள்.
பொங்கல் வைக்கும் போட்டி தொடங்க, தீபாவுக்கு உதவியாக மீனாட்சியும், அபிராமிக்கு உதவியாக ஐஸ்வர்யாவும் களத்தில் இறங்குகின்றனர்.
அபிராமி சர்க்கரையை தேட, அப்படியே தீபா வைத்து இருந்த சமையல் பொருட்களில் இருந்த சர்க்கரையை எடுத்து..நீ வெல்ல த்தில் தானே பொங்கல் வைக்கிறாய்..பிறகு ஏன் உனக்கு சர்க்கரை… என்று திட்டி விட்டு பொங்கல் வைக்கிறாள். இருவரது பொங்கலும் ஒரே நேரத்தில் பொங்குகிறது.
பிறகு பொங்கலை எல்லாருக்கும் கொடுக்க, அபிராமியின் பொங்கல் உப்பு கரிக்க குடும்பத்தார் யாரும் அதையும் வெளியில் சொல்லாமல் மறைத்து விடுகின்றனர். ஆனால், கெஸ்ட்டாக வந்திருந்தவர்கள் அபிராமி பொங்கல் உப்பாக இருப்பதாக சொல்லுகின்றனர்.
இதனையடுத்து அபிராமி டேஸ்ட் செய்து பார்த்து விட்டு தீபாவின் பொங்கல் தான் நன்றாக இருப்பதாக ஒப்பு கொள்ள ஐஸ்வர்யா அதிர்ச்சியாக,தீபா மகிழ்ச்சியாகிறாள்.
பிறகு தீபா, அபிராமியை சந்தித்து நன்றி சொல்ல, நீ வேணும்னு தான் இப்படி பண்ணி இருப்பேனு எனக்கு நல்லாவே தெரியும், மத்தவங்க முன்னாடி நம்ம குடும்ப மானம் போக கூடாதுனு தான் நான் அமைதியா இருந்தேன்.
நான் என்னைக்கும் உன்னை நம்பவும் மாட்டேன், என் மருமகளா ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன் என்று கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
டாபிக்ஸ்