Karthigai Deebam: ‘மொத்தமாக உடைந்த உண்மை.. கார்த்தியிடம் கெஞ்சிய ரம்யா அப்பா! - கார்த்திகை தீபம் அப்டேட்!-zee tamil karthigai deebam serial latest episode update - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deebam: ‘மொத்தமாக உடைந்த உண்மை.. கார்த்தியிடம் கெஞ்சிய ரம்யா அப்பா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deebam: ‘மொத்தமாக உடைந்த உண்மை.. கார்த்தியிடம் கெஞ்சிய ரம்யா அப்பா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 03, 2024 01:48 PM IST

Karthigai Deebam: தீபாவிடம் எதையும் சொல்லாமல் அவளை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு விட்டு, அந்த சேகருடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, ரம்யா குறித்து கூறியதோடு மட்டுமல்லாமல், அவளை கைது செய்யவும் சொல்கிறான் - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deebam: ‘மொத்தமாக உடைந்த உண்மை.. கார்த்தியிடம் கெஞ்சிய ரம்யா அப்பா! - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deebam: ‘மொத்தமாக உடைந்த உண்மை.. கார்த்தியிடம் கெஞ்சிய ரம்யா அப்பா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ரம்யாவின் அப்பா கார்த்தியிடம் உண்மையை சொல்லி விட்டது போலவும், ரம்யா தன்னை தானே சுட்டு கொண்டது போலவும் கனவு கண்ட நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

எச்சரித்த கார்த்திக்! 

அதாவது, போலீஸ் போலி சாமியாரை தாடி மீசை இல்லாமல் வரைந்து கொடுக்க, அது அபிராமி அழைத்து வந்த ஆள்தான் என்று தெரிந்ததும், கார்த்திக் ஆனந்துக்கு போன் செய்தான். தொடர்ந்து, அவன் இருக்கானா என்று விசாரிக்க, ஆனந்த் அவன் ஊருக்கு போய் இருப்பதாக சொல்கிறான். 

இதையடுத்து கார்த்திக் எதேர்சையாக கோயிலில் அவனை பார்க்க நேர்கிறது. இந்த நிலையில், கார்த்திக் அவனை அடித்து உதைக்க, அவன் அடிக்காதீங்க சார் நான் உண்மையையே சொல்லிடுறேன் என்று கூறி, ரம்யா தான் எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்லி விடுகிறான். உடனே கார்த்திக், ரம்யா அப்பாவுக்கு போன் போட்டு, உங்க பொண்ணு தான் எல்லாத்தையும் பண்ணி இருக்கா அவளை சும்மா விட மாட்டேன் என்று எச்சரித்து போனை வைக்கிறான். 

காவல் நிலையத்தில் கார்த்திக்

தீபாவிடம் எதையும் சொல்லாமல் அவளை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு விட்டு, அந்த சேகருடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, ரம்யா குறித்து கூறியதோடு மட்டுமல்லாமல், அவளை கைது செய்யவும் சொல்கிறான். அத்துடன், எல்லாத்துக்கும் சேகர் தான் சாட்சி என்று அவனையும் ஒப்படைக்கிறான்.

இதை தொடர்ந்து ஸ்டேஷன் வரும் ரம்யாவின் அப்பா, ரம்யா செய்தது தப்பு தான். அவளை தண்டிக்க வேண்டாம்னு சொல்லல. தீபா மேல எனக்கும் அக்கறை இருக்கு. சின்ன வயசுல இருந்தே, ரம்யாவுக்கு ஒன்னு பிடிச்சா அதை அடையணும்னு நினைப்பா; இல்ல, அதை அழிக்கணும்னு நினைப்பா.. அது தான் அவளோட குணம். அது தான் உங்க விஷயத்திலயும் நடந்திருக்கு என்று சொல்ல, சாந்தமான கார்த்திக் யோசிக்க ஆரம்பித்து விட்டான். 

இங்கு நடப்பது எதுவும் தெரியாத ரம்யா, ஈவென்ட் மேனேஜர் ஒருவரை அழைத்து வந்து, தீபா கல்யாணத்துக்கு இவரை வைத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்யலாம் என்று சொல்கிறாள். அதற்கு, அபிராமியும் ஓகே சொல்கிறாள். இந்த நேரத்தில் அங்கு வந்த ரம்யாவின் அப்பா, அப்படியே என் பொண்ணு ரம்யாவுக்கும் ஒரு வரனை பாருங்க, ஒரே மேடையில் கல்யாணத்தை முடிச்சிடலாம் என்று சொல்ல, ரம்யா அதிர்ந்து போகிறாள். 

மறுப்பும் சொல்ல முடியாமல் நிற்கிறாள்; அடுத்து இதெல்லாம் கார்த்தியின் திட்டம் தான் என்பது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.