Karthigai Deebam: தீபாவுக்கு எதிராக நடந்த சதி.. கடைசி நேரத்தில் கேமை மாற்றிய கார்த்திக்! - கா., தீபம் அப்டேட்!
தீபாவுக்கு எதிராக நடந்த சதி.. ட்விஸ்ட் வைத்த கார்த்திக்! - கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோடுகளின் அப்டேட் இங்கே!

கார்த்திகை தீபம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவின் கச்சேரி குறித்து தமிழகம் முழுவதும் போஸ்டர் ஓட்டினான். அதை பார்த்து தர்மலிங்கம் ஆனந்த கண்ணீர் விட்டு நன்றி கூறிய நிலையில், இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்!
போஸ்டரை பார்த்து கடுப்பாகும் ரூபாஸ்ரீ, இந்த தீபாவை பாடவே விட கூடாது என முடிவு செய்கிறாள். இதனையடுத்து நேராக போலீசை கூப்பிட்டு கொண்டு, இவர்கள் பொண்ணை பாட வைப்பதாக சொல்லி 10 லட்சம் ரூபாய் பணம் வாங்கி இருக்காங்க, அதை கொடுத்தா தான் கச்சேரி நடக்கணும் என்று சொல்கிறாள்.