வீட்டுக்கு வரும் விஜய்…சின்னத்திரையில் சிட்டாய் வரும் கோட்.. எந்த சேனல்.. எப்போது ஒளிப்பரப்பு? - முழு விபரம்!
பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் விஜயின் கோட் திரைப்படம் ஒளிப்பரப்பாக இருக்கிறது

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ், மக்கள் எதிர்பார்க்கும் வகையில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட சீரியல்கள், மாறுபட்ட ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக தொடர்ந்து மக்களை கவர்ந்து வருகிறது.
அந்த வகையில், பண்டிகை தினங்களிலும் மக்களை மகிழ்விப்பதற்காக புத்தம் புதிய திரைப்படங்கள் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை ஜீ தமிழ் வழங்குவது வழக்கமான ஒன்று; அந்த வரிசையில், வரும் ஜனவரி 12-ம் தேதி முதல் பொங்கல் பண்டிகை முடியும் வரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்வுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
விஜயின் கோட்
வரும் ஜனவரி 12-ம் தேதி மாலை 6:30 மணிக்கு விஜய் நடிப்பில் வெளியாகி 2024-ன் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக வெற்றி பெற்ற Greatest Of All Time ( GOAT ) திரைப்படம் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. விஜயின் டபுள் ஆக்சன் திரைப்படமான கோட் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.