வேட்டியை உருவி ஓட விட்ட ஷண்முகம்.. இசக்கியின் உயிரை எடுக்க துணிந்த சௌந்தரபாண்டி - அண்ணா சீரியலில் நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வேட்டியை உருவி ஓட விட்ட ஷண்முகம்.. இசக்கியின் உயிரை எடுக்க துணிந்த சௌந்தரபாண்டி - அண்ணா சீரியலில் நடந்தது என்ன?

வேட்டியை உருவி ஓட விட்ட ஷண்முகம்.. இசக்கியின் உயிரை எடுக்க துணிந்த சௌந்தரபாண்டி - அண்ணா சீரியலில் நடந்தது என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Published Nov 12, 2024 06:42 PM IST

வேட்டியை உருவி ஓட விட்ட ஷண்முகம்.. இசக்கியின் உயிரை எடுக்க துணிந்த சௌந்தரபாண்டி - அண்ணா சீரியலில் நடந்தது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்

வேட்டியை உருவி ஓட விட்ட ஷண்முகம்.. இசக்கியின் உயிரை எடுக்க துணிந்த சௌந்தரபாண்டி - அண்ணா சீரியலில் நடந்தது என்ன?
வேட்டியை உருவி ஓட விட்ட ஷண்முகம்.. இசக்கியின் உயிரை எடுக்க துணிந்த சௌந்தரபாண்டி - அண்ணா சீரியலில் நடந்தது என்ன?

அண்ணா சீரியல் 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வைகுண்டத்தை அவமானப்படுத்தியதால் ஷண்முகம் ஆவேசமாக கிளம்ப, பரணி தடுத்து நிறுத்திய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பரணி சண்முகத்தை தடுத்து நிறுத்தி அரிவாளை கையில் எடுக்க கூடாது, அகிம்சை முறையில் தான் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறாள்.

அடுத்த நாள் காலையில் சௌந்தரபாண்டி கோயிலில் தீபாவளிக்காக இலவச வேட்டி சேலை கொடுத்து கொண்டிருக்க, ஷண்முகம் அங்கு வந்து வரிசையில் நிற்கிறான். இதை பார்த்த சௌந்தரபாண்டி என்னாலே உனக்கும் வேட்டி வேண்டுமா என்று கேட்க ஆமாம் என்று சொல்கிறான்.

உனக்கு வேட்டி மட்டுமில்ல ஜட்டியும் நான் தான் தரணும் என்று நக்கலாக பேச, எனக்கு வேட்டி வேணும் தான், ஆனால் அந்த வேட்டி வேணாம் என்று சொல்லி சௌந்தரபாண்டியன் வேட்டியை உருவி அண்டராயருடன் நிற்க வைக்கிறான். அடுத்து ஜட்டி தரேன்னு சொன்னீங்களே எடுத்துக்கவா என்று கேட்டு சௌந்தரபாண்டியை ஓட விடுகிறான்.

ஷண்முகம்

அடுத்து ஷண்முகம் வீட்டிற்கு வர, பரணி நீ பண்றதெல்லாம் காமெடியா இருந்தாலும் இதெல்லாம் இசக்கியை தான் பாதிக்கும் என்பதை மறந்துடாத என்று எச்சரிக்க, மறுபக்கம் சௌந்தரபாண்டி வேட்டி இல்லாமல் வீட்டிற்கு வர, இசக்கி இதை பார்த்து சிரிக்கிறாள்.

இதனால் சௌந்தரபாண்டி இதுக்கெல்லாம் காரணம் உன் அண்ணன் தான் என ஆவேசப்பட்டு மண்ணெய்யை எடுத்து இசக்கி மீது ஊற்றி கொளுத்த போகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.