Zee Tamil Serial: ‘அண்ணா’ மற்றும் ‘மாரி’ சீரியல்கள்.. பரபரப்பாக்கும் திருப்பு முனைகள்! - இன்று நடக்கப்போவது என்ன?
Zee Tamil Serial: ‘அண்ணா’ மற்றும் ‘மாரி’ சீரியல்களின் அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Anna Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில், சௌந்தரபாண்டி வரவைத்து இருந்த பெண் வீட்டார், சிவபாலனை வீட்டோட மாப்பிள்ளையாக கேட்ட நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஓகே சொன்ன சிவபாலன்
சிவபாலன் எனக்கு ஓகே தான் பா... நான் வீட்டோட மாப்பிள்ளையாக போயிடுறேன்.. நீங்க மட்டும் தனியா சந்தோசமா இருங்க என்று சொல்ல, சௌந்தரபாண்டி இனிமே யாராவது வீட்டோட மாப்பிள்ளையாக கேட்டு வந்தீங்க… அவ்வளவு தான் என சத்தம் போடுகிறார்.
இதைத்தொடர்ந்து, திருச்செந்தூரை பூர்வீகமாகக் கொண்டு, அமெரிக்காவில் செட்டிலான ஒரு குடும்பம் ஒன்று கோயிலில் பரிகாரம் செய்வதற்காக திருச்செந்தூர் வருகின்றனர்.
அப்போது கணவனும், மனைவியும் கோயில் குளத்தில் தலை மூழ்கி வருவதற்காக செல்கின்றனர். அவர்கள் தங்களது குழந்தையை மட்டும் காரில் உட்கார வைத்து விட்டு, ட்ரைவரை பார்த்து கொள்ள செல்கின்றனர். திடீரென குழந்தைக்கு ஃபிக்ஸ் வர ட்ரைவர் பதறி போய் குளத்தருகே செல்கிறார்.
சோதனை செய்த பரணி
அங்கு யாரும் இல்லாத காரணத்தால், வேறு வழியின்றி குழந்தையை பரணியின் கிளினிக்கிற்கு அழைத்து செல்கிறார். குழந்தையை பரிசோதனை செய்த பரணி, உடனே மதுரைக்கு அழைத்து செல்ல வேண்டும் என மதுரைக்கு கிளம்புகின்றனர். அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
அமெரிக்காவில் இருந்து திருச்செந்தூர் வரும் பிரபலங்களாக, ‘தெய்வம் தந்த பூவே’ ஸ்ரீநிதி மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘ஜமீலா’ என்ற சீரியலில் நாயகனாக நடித்த அஜய் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும், குழந்தை நட்சத்திரமாக ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல் அஞ்சலி பாப்பா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரி சீரியலின் அப்டேட்டையும் இங்கே பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், தேவி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, என் அம்மாவை காணவில்லை என்று சொல்லி, இன்ஸ்பெக்டர் துர்க்கா நம்பரை வாங்கிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, துர்கா ஸ்டேஷனுக்கு வருகிறாள். அவளிடம் ஒரு குழந்தை அவங்க அம்மாவை காணவில்லை, கண்டுப்பிடித்து தாங்க என்று சொல்லி வந்ததாகவும், உங்க போன் நம்பர் கொடுத்து அனுப்பியதாகவும் சொல்கின்றனர்.
ஃபீல் செய்கிறாள்
அடுத்து, தேவி துர்காவிற்கு போன் செய்து என் அம்மா நான் சின்ன வயசா இருக்கும் போதே, சாமிக்கிட்ட போய் விட்டதாக சொல்றாங்க.. நீங்க தான் எப்படியாவது கண்டுபிடித்து தரணும் என்று சொல்கிறாள். துர்கா இதை கேட்டு ஃபீல் செய்கிறாள்.
அம்மா இறந்தது தெரியாமல், குழந்தை அம்மா ஞாபகத்தில் இப்படி பேசுகிறாள் என்பதை புரிந்து கொண்டு கவலைப்படாதே பாப்பா.. உங்க அம்மாவை கண்டு பிடித்து விடலாம், நான் தேடுறேன் என்று சமாளித்து போனை வைக்கிறாள்.
சங்கரபாண்டி
அடுத்த நாள் சங்கரப்பாண்டியை குற்றவாளி என நினைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வருகின்றனர். பிறகு சங்கரபாண்டி தாராவுக்கு தகவல் கொடுக்க, தாரா ஸ்டேஷனுக்கு வருகிறாள். பிறகு துர்கா நீங்க எதிர் வீட்டில் இருக்கவங்க தானே என்று புரிந்து கொண்டு அனுப்பி வைக்கிறாள்.
இதனை தொடர்ந்து தேவி மீண்டும் துர்காவிற்கு போன் செய்து எங்க மாமாவை கண்டு பிடிச்சிட்டீங்களா? என்று கேட்க இல்லமா தேடிட்டு இருக்கோம். உங்க அம்மா எப்படி இருப்பாங்க என்று துர்கா கேட்க, தேவி தனது அம்மாவின் அழகை வர்ணித்து பேசுகிறாள்.
அடுத்து துர்கா வீட்டிற்கு வர, சரஸ்வதி ஸ்வீட் செய்ததாகவும், எதிர் வீட்டில் கொடுத்துட்டு வரும்படியும், துர்காவை சூர்யா வீட்டிற்கு அனுப்புகிறாள். அப்போது பார்வதி மற்றும் ஹாசினியிடம் ஸ்வீட்டை கொடுக்கும் துர்கா, மாரி போட்டோவை பார்த்து யார் இவங்க என விசாரிப்பதோடு தாலியையும் தொட செல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

டாபிக்ஸ்