Zee5:100 மில்லியன் ஸ்ட்ரீமிங் கிளப்பில் நுழைந்த ‘விலங்கு’, ‘அயலி’ வெப் சீரிஸ்கள்
விலங்கு மற்றும் அயலி வெப் சீரிஸ்கள் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் கிளப்பில் நுழைந்திருப்பதாக Zee 5 ஓடிடி தளம் தெரிவித்து இருக்கிறது
ட்ரெண்டிங் செய்திகள்
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “ ZEE5 ஓடிடி தளமானது கடந்த 12 மாதங்களில் தமிழ் சந்தைகளில் பார்வையாளர் அடிப்படையில் 54% அதிகரிப்பு மற்றும் செயல்பாட்டு அடிப்படையில் 63% அதிகரிப்பை கண்டு இருக்கிறது.
தமிழ் சார்ந்த படைப்புகளை ZEE 5 தளத்தில் பார்க்கும் பார்வையாளனின் நேரமானது 23% அதிகரித்துள்ளது. இதில் தமிழ் படைப்புகளான ‘அயலி’ ‘விலங்கு’ ‘பேப்பர் ராக்கெட்’ ‘வலிமை’ உள்ளிட்ட படைப்புகளின் பங்கு அதிகம். குறிப்பாக அயலி மற்றும் விலங்கு ஆகிய படைப்புகள் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் கிளப்பில் நுழைந்து இருக்கிறது. இது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது.
இது குறித்து இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி திரு. மணீஷ் கல்ரா "ZEE5 இல், இந்த ஊக்கமளிக்கும் வரவேற்பு எங்களுக்கு உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது. Zee 5 ஓடிடி தளத்தின் பிரத்யேக அசல் திரைப்படங்கள், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள், சர்வதேச விளையாட்டுகள், டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை பார்வையாளர்கள் இதயத்திற்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. முன்னோக்கிச் செல்லும்போது, வளர்ச்சிப் போக்கைத் தக்கவைத்துக்கொள்வதிலும், தமிழ் பொழுதுபோக்குத் துறையில் எங்கள் முதலீடுகளை அதிகரிப்பதிலும் எங்கள் கவனம் இருக்கும்.” என்றார்.
ZEE என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் -ன் தெற்கு தலைமை கிளஸ்டர் அதிகாரி திரு. சிஜு பிரபாகரன் கூறுகையில், "நாங்கள் துறையில் மிகவும் நம்பிக்கையான கண்ணோட்டத்துடனும் இந்த சந்தையைப் பற்றிய புரிதலுடனும் தொடர்ந்து இருக்கிறோம். இந்த ஆண்டின் எங்கள் ஆக்கப்பூர்வமான ஆய்வு, எங்கள் வரம்புகளை விரிவுபடுத்தி OTT -ல் மக்கள் எதிர்பார்ப்பது என்ன என்பது பற்றிய புரிதலை தந்திருக்கிறது. அவை பாரம்பரிய தடைகளையும் உடைத்திருக்கிறது. அதற்கு உதாரணம் அயலி, பேப்பர் ராக்கெட்.
வரும் காலத்தில் மனதைக் கவரும் வகையில் அழுத்தமான கதைகளை உருவாக்குவதே இந்த திட்டமாயிருக்கிறது. "என்று கூறினார்.
அடுத்ததாக கலையரசன் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள செங்களம் திரைப்படம் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
இன்று, ZEES ஆனது, 5 இலட்சத்துக்கும் அதிகமான மணிநேர கோரிக்கையின் பேரில் அணுகக்கூடிய உள்ளடக்கமாக இருக்கிறது. 160 க்கும் மேற்பட்ட நேரலை டிவி சேனல்களை வழங்குகிற இடமாகவும் இது மாறியிருக்கிறது.
ZEE5 ஆனது 3,400 க்கும் அதிகமான திரைப்படங்கள் 200 க்கும் அதிகமான தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் 170 க்கும் மேற்பட்ட அசல் தயாரிப்புகளின் வளமான தொகுப்புடன் ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட 12 இந்திய மொழிகள் மற்றும் 6 சர்வதேச மொழிகளில் உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.