Yuvraj Singh biopic: சிக்ஸர் மன்னன், உலகக் கோப்பை வெற்றியாளர்..! “சிக்ஸ் சிக்ஸர்ஸ்” - உருவாகிறது யுவராஜ் சிங் பயோபிக்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Yuvraj Singh Biopic: சிக்ஸர் மன்னன், உலகக் கோப்பை வெற்றியாளர்..! “சிக்ஸ் சிக்ஸர்ஸ்” - உருவாகிறது யுவராஜ் சிங் பயோபிக்

Yuvraj Singh biopic: சிக்ஸர் மன்னன், உலகக் கோப்பை வெற்றியாளர்..! “சிக்ஸ் சிக்ஸர்ஸ்” - உருவாகிறது யுவராஜ் சிங் பயோபிக்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 20, 2024 11:56 AM IST

சிக்ஸர் மன்னன், உலகக் கோப்பை வெற்றியாளர், இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு படம் உருவாக இருக்கிறது. டி-சீரிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சிக்ஸ் சிக்ஸர்ஸ் என்ற பெயரில் உருவாக இருக்கும் படம் குறித்த முழு விவரம் இதோ

Yuvraj Singh biopic:  சிக்ஸர் மன்னன், உலகக் கோப்பை வெற்றியாளர், “சிக்ஸ் சிக்ஸர்ஸ்” என்ற பெயரில் உருவாகிறது யுவராஜ் சிங் பயோபிக்
Yuvraj Singh biopic: சிக்ஸர் மன்னன், உலகக் கோப்பை வெற்றியாளர், “சிக்ஸ் சிக்ஸர்ஸ்” என்ற பெயரில் உருவாகிறது யுவராஜ் சிங் பயோபிக்

இந்த அணி வென்ற இரண்டு உலகக் கோப்பை தொடர்களின் ஹீரோவாக இருத்தது, புற்றுநோயிலிருந்து மீண்டு கிரிக்கெட் விளையாட்டை தொடர்ந்து வரை யுவராஜ் சிங் வாழ்க்கை பயணத்தை எடுத்துரைக்கும் விதமாக இந்த படம் அமைந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.

களத்திலும் வெளியேயும் யுவராஜின் வெற்றிகள்

கிரிக்கெட் ஆடுகளத்திலிருந்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களை இதயத்தை கவர்ந்த ஹீரோவாக, லெஜண்டாக இருக்கும் யுவராஜ் சிங் வாழ்க்கை பயணம், அவரது மன உறுதி மற்றும் சாதித்த பெருமைகள் பற்றி கதை விரைவில் பெரிய திரையில் வருகிறது என படம் குறித்து தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனிமல் மற்றும் கபீர் சிங் போன்ற படங்களுக்கு பெயர் பெற்ற படங்களை தயாரித்த டி-சீரிஸ் நிறுவனத்தின் தலைவர் பூஷன் குமார் படம் குறித்து கூறியதாவது, "யுவராஜின் கதையை உயிர்ப்பிக்க தயாரிப்பாளர் ரவி பாக்சந்த்காவுடன் கைகோர்க்கிறோம். இவர் 2017ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாற்றை கூறும் ஆவணப்படமான சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸை படத்தை உருவாக்கியிருந்தார்." என்றார்

இந்த படம் யுவராஜின் நீண்ட வாழ்க்கையில் இடம்பிடித்த ஐகானிக் தருணங்கள் திரையில் உருவாக்கி கண்முன்னே காண்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடுக்கு எதிராக ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்து, இந்தியா 2007 டி20 உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

அதே போல் 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதில் பேட்டிங், பவுலிங் என யுவராஜின் பங்களிப்பு முக்கியமானதாக அமைந்தது. இதற்காக அவர் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

2011ஆம் ஆண்டில், யுவராஜ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போதிலும், அதிலிருந்து மீண்டு கிரிக்கெட்டுக்கு திரும்பியது மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுவராஜ் சிங் 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அந்த வகையில் கிரிக்கெட் களத்திலும், அதற்கு வெளியேயும் யுவராஜ் பெற்றி வெற்றிகளின் தொகுப்பாக இந்த படம் உருவாகும் என தெரிகிறது.

 

கனவுகளை தொடர ஊக்குவிக்கும் என நம்புகிறேன்

"பூஷண் மற்றும் ரவி ஆகியோரால் உலகெங்கிலும் உள்ள எனது மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு எனது கதை காண்பிக்கப்படுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைத்து ஏற்ற இறக்கங்களுக்கும் மத்தியில் கிரிக்கெட் எனது மிகப்பெரிய அன்பு மற்றும் பலத்தின் ஆதாரமாக இருந்து வருகிறது.

இந்த படம் மற்றவர்கள் தங்களது சவால்களை சமாளிக்கவும், அவர்களின் கனவுகளை அசைக்க முடியாத ஆர்வத்துடன் தொடரவும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்" என்று தனது வாழக்கை வரலாறு படம் குறித்து யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.