தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Yuvan Shankar Raja: இன்ஸ்டாவை Deactivate செய்தாரா யுவன் ஷங்கர் ராஜா? இதோ அவரே அளித்த விளக்கம்

Yuvan Shankar Raja: இன்ஸ்டாவை Deactivate செய்தாரா யுவன் ஷங்கர் ராஜா? இதோ அவரே அளித்த விளக்கம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 18, 2024 05:23 PM IST

#YuvanShankarRaja என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக, விசில் போடு என்ற கோட் பாடலுக்கு தொடர்ந்து பதிவாகி வரும் நெகடிவ் விமர்சனங்கள் காரணமாக அவர் இன்ஸ்டா அக்கவுண்டை Deacitivate செய்ததாக தகவல் பரவியது.

விஜய்யுடன் யுவன் ஷங்கர் ராஜா
விஜய்யுடன் யுவன் ஷங்கர் ராஜா

ட்ரெண்டிங் செய்திகள்

கோட் சிங்கிள் பாடல்

இதையடுத்து தளபதி விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் படத்தின் இசையமைப்பாளராக உள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. இதையடுத்து இந்த படத்திலிருந்து விசில் போடு என்ற பாடல், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுகிழமை வெளியிடப்பட்டது.

தளபதி விஜய் பாடிய இந்த பாடலுக்கு யூடியூப்பில் நல்ல views கிடைத்தபோதிலும், ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தனர். விஜய்யின் மாஸுக்கு இந்த பாடல் இல்லை எனவும், யுவனுக்கு பழைய மாதிரி மாஸ்ஸான பாடல்களை இசையமைக்க முடியவில்லை என ரசிகர்கள் பலரும் ஓபனாக கருத்துகளை பகிர்ந்தனர்.

இன்ஸ்டாவை Deactivate செய்த யுவன்

குறிப்பாக யுவனின் இன்ஸ்டா பக்கத்தில் விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து நெகடிவாக கருத்துகளை பகிர்ந்து வந்தார்கள். இதைத்தொடர்ந்து திடீரென யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை Deactivate செய்துள்ளார். இதன் பின்னர் விசில் போடு பாடலுக்கு தொடர்ந்து வெளியாகி வரும் எதிர்மறையான கருத்துகள் காரணமாகவே அவர் இவ்வாறு செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே #YuvanShankarRaja என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது. இதில் யுவனுக்கு ஆதரவாக பலரும் கருத்துகளை பகிர்ந்து வந்தனர்.

யுவன் விளக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக யுவன் ஷங்கர் ராஜா தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில், அக்கறையுடன் மெசேஜ் அனுப்பியவர்களுக்கு நன்றிகள். இதுவொரு தொழில்நுட்ப கோளாறுதான். எனது இன்ஸ்டா கணக்கை மீட்டெடுக்க என் குழுவினர்கள் முயற்சித்து வருகிறார்கள். விரைவில் வருகிறேன்.ய எப்போதும் அன்புடன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே யுவனின் இன்ஸ்டா கணக்கு முடங்கி இருப்பது அவரது தரப்பில் இருந்து உறுதிசெய்யப்பட்டது.

 

இரண்டாவது முறையாக இணையும் விஜய் - யுவன் கூட்டணி

2003இல் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். இதன் பின் 21 ஆண்டுகள் கழித்து தற்போது விஜய் நடிக்கு கோட் படத்துக்கு இசையமைக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.

கோட் படத்தில் விஜய்யுடன், 90ஸ் ஹீரோக்களான பிரசாந்த், பிரபுதேவா, 80ஸ் ஹீரோ மோகன், முன்னாள் ஹீரோயின்கள் சிநேகா, லைலா, கனிகா, பார்வதி நாயர், மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, ஜெயராம் மற்றும் வெங்கட் பிரபுவின் படங்களின் தோன்றும் நடிகர்களான வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜ்ய் ராஜ் உள்பட பலரும் நடிக்கிறார்கள்.

படத்தில் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் தளபதி விஜய், இளமையான தோற்றத்தில் தோன்றவுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்