Thalapathy Vijay: கலந்து கட்டி வரும் விமர்சனங்கள்.. ‘தளபதி மீது நான் வச்ச அன்ப காட்டுறதுக்கு’ - யுவன் ஷங்கர் ராஜா பதில்!
Thalapathy Vijay: சகோதரர் வெங்கட் பிரபுவிற்கும், குழுவிற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். - யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நடிகர் விஜய் குறித்து எமோஷனலான பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
அன்பை வெளிப்படுத்த வாய்ப்பு
இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் யுவன்ஷங்கர்ராஜா, “ நீங்கள் கொடுத்த அன்பிற்கு நன்றி மக்களே. இந்த வாய்ப்பின் மூலமாக தளபதி விஜய் அண்ணா மீது நான் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தி தந்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு நன்றி. அதே போல இந்த வாய்ப்பை எனக்கு சாத்தியப்படுத்திக்கொடுத்த சகோதரர் வெங்கட் பிரபுவிற்கும், கோட் படக்குழுவிற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் இல்லாமல் இது சாத்தியப்பட்டு இருக்காது.” என்று பதிவிட்டு இருக்கிறார்.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே 'தி கோட்'. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், யோகி பாபு, வைபவ், பிரேம்ஜி, அஜ்மல், விடிவி கணேஷ், அர்விந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
கோட் திரைப்படம் எப்படி இருக்கிறது?
கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர Special Anti terrorist squad team சார்பில் காந்தி ( விஜய்), அஜய் (அஜய்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் ( பிரபு தேவா) ஆகியோர் கொண்டு செல்ல ஆயுதங்களுடன் களமிறங்க, அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மேனன் ( மோகன்) இறந்து விடுவதாக காட்டப்படுகிறது.
இதற்கிடையே தாய்லாந்திற்கு மனைவி அனு ( சினேகா) உடன் செல்லும் காந்தி, தன்னுடைய மகனை பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது. ஆனால் பின்னாளில் அவனை காந்தி பிரச்சினை ஒன்றில் சந்திக்கிறார். அந்த பிரச்சினை என்ன? அதில் காந்திக்கு வில்லனாக ஜீவன் மாறியது ஏன்? என்பது படத்தின் மீதிக்கதை.
யுவன்சங்கர் ராஜா பங்களிப்பு என்ன?
படத்தின் ஆகப்பெரிய பலவீனம் யுவனின் பின்னணி இசை. ஆம், முதல் பாதியில் அவரின் பின்னணி இசை, காட்சிகளின் உயிர்ப்பை கடத்த பெரிதாக உதவவில்லை. இரண்டாம் பாதியில் ஏதோ முயன்று இருக்கிறார்.
ஓப்பனிங் பாடலில் கரெக்ஷன், மெலடி பாடலுக்கு பதிலாக இளையராஜா பாடல், பின்னணி இசையில் முத்திரை பதித்து படத்திற்கு பலம் சேர்க்காமல் போனது உள்ளிட்டவை யுவன் இந்த வாய்ப்பை அலட்சிய போக்குடன் கையாண்டு இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.‘கோட்’ படத்தின் திரைக்கதை சுவாரசியமாக இருந்த போதிலும் ஆனாலும் வெங்கட் பிரபு படங்களில் கதையில் காணப்பட்ட அழுத்தம் இல்லாமல் போனது கோட்டை, கோட்டை விட வைத்து இருக்கிறது.
தோல்வியில் இருந்து வெற்றி
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா, அங்கிருக்கும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார். அப்போது தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அப்போது, "எல்லோருக்கும் வணக்கம், உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு "தோல்வியில் இருந்து வெற்றி" அதைப் பற்றித் தான் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்." என்றார்.
மேலும் "ஆரம்பத்தில் நான் இசைமயைத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நான் இசையமைக்கும் படங்கள் எல்லாமே தோல்வியடையும் என்று என் மீது முத்திரை குத்தினர். இதனால், நான் தனி அறையில் அமர்ந்து, கதவை பூட்டிக் கொண்டு அழுதேன்.
பேசுகிற வாய் பேசிக் கொண்டே பேசிட்டேதான் இருக்கும்
அதன் பின்னர் எங்கு தவறு நடந்தது என்று யோசித்தேன். சில நாட்கள் கழிந்தன. பிறகு மீண்டும் இசையமைக்க துவங்கினேன். இப்படித்தான் இன்று இங்கு உங்கள் முன் நிற்கிறேன். இதில் உள்ள யோசனை என்னவென்றால், பேசுகிற வாய் பேசிக் கொண்டே தான் இருக்கும், நாம் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.
எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது. எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் அவை எதற்கும் செவி சாய்க்கக்கூடாது. தலை நிமிர்ந்த படி எல்லாவற்றையும் கடந்து வர வேண்டும். இதனால் தான் என்னால் இத்தனை ஆண்டுகள் இந்தத் துறையில் நீடித்து நிற்க முடிகிறது.
எனக்கு வரும் கருத்துக்கள், பேச்சுகள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தால், இத்தனை ஆண்டுகள் பயணித்திருக்க முடியாது. என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும். நல்ல இசை மற்றும் பாசிட்டிவிட்டிக்கு மட்டுமே என் காதுகள் திறந்திருக்கும். உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றிகள்," என்று பேசினார்
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்