தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Yuvan, Karthik Raja And Venkat Prabhu Stood To Receive Bhavadharini's Body At Chennai Airport.

RIP Bhavatharini:சென்னை ஏர்போர்ட் வந்த பவதாரிணியின் உடல்.. அழுகையை அடக்கி நின்று இருந்த யுவன்.. ஓடோடி வந்த மனோஜ்

Marimuthu M HT Tamil
Jan 26, 2024 04:29 PM IST

சென்னை விமான நிலையம் வந்தடைந்த பவதாரிணியின் உடலைப் பெற அவரது குடும்பத்தினர் ஏர்போர்ட்டில் நின்று கொண்டு இருந்தனர்.

சென்னை ஏர்போர்ட் வந்த பவதாரிணியின் உடல்.. அழுகையை அடக்கி நின்று இருந்த யுவன்.. ஓடோடி வந்த மனோஜ்
சென்னை ஏர்போர்ட் வந்த பவதாரிணியின் உடல்.. அழுகையை அடக்கி நின்று இருந்த யுவன்.. ஓடோடி வந்த மனோஜ்

ட்ரெண்டிங் செய்திகள்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று ( ஜன.25) மாலை 5.20 மணிக்கு இலங்கையில் காலமானார். புற்றுநோய் காரணமாக ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 47. இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். பவதாரிணி கடந்த 2005ஆம் ஆண்டு சபரி ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சபரி ராஜன் ஹோட்டல் பிஸினஸ் செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர் தனது சொத்துக்களை மனைவி பவதாரிணி மீது தான் வாங்கி உள்ளார். மேலும் பாவதாரிணியும் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து சம்பாதித்து வந்தார்.

பவதாரிணி, பிரபல இசையமைப்பாளர் இளையராஜவின் மகள். கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி ஆவார். இவர் அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் பாடியுள்ளார்.

இளையராஜா இசையில் பாரதி படத்தில் ‘மயில்போல பொண்ணு ஒண்ணு’ பாடல் பாடிய பவதாரிணிக்கு, சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது. முன்னதாக இவர், ‘ராசய்யா’ படத்தில் பாடகியாக அறிமுகமானார். மேலும் இசையமைப்பாளர்களான தேவா மற்றும் சிற்பி ஆகியோரது இசையிலும் பவதாரிணி பாடியுள்ளார்.

‘அழகி’ படத்தில் இவர் பாடிய ‘ஒளியிலே தெரிவது தேவதையா’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. மேலும், ‘உல்லாசம்’ படத்தில் முத்தே முத்தம்மா, தனுஷ் நடித்த 'அநேகன்’ படத்தில் 'ஆத்தாடி, ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி' பாட்டும் பவதாரிணியின் தனித்துவமான குரலுக்கு மிகப்பெரிய சான்றாகும்.

பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு மாலை 3.30 மணியளவில் வந்தடைந்தது. இன்னும் சற்று நேரத்தில் தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜா வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. இந்நிலையில் அவரது உடலைப் பெற பவதாரிணியின் தம்பி யுவன் சங்கர் ராஜா, அண்ணன் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். அப்போது யுவன் சங்கர் ராஜா அழுகையை அடக்கியபடி மிகவும் சோகமாக காணப்பட்டார். 

இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் இல்லத்திற்கு நடிகர்கள் மனோஜ் பாரதி, பிரேம்ஜி உள்ளிட்டோர் விரைந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.