தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Yugendran On Vijay: அய்யய்யோ.. என்ன இப்படி சொல்லிட்டார்; விஜய்க்கு தெரிஞ்சா என்ன ஆகும்? - கோட் சீக்ரெட்டை உடைத்த யூகே!

Yugendran on Vijay: அய்யய்யோ.. என்ன இப்படி சொல்லிட்டார்; விஜய்க்கு தெரிஞ்சா என்ன ஆகும்? - கோட் சீக்ரெட்டை உடைத்த யூகே!

Kalyani Pandiyan S HT Tamil
May 04, 2024 04:17 PM IST

ஒரு கட்டத்தில் நாம் எதையும் பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம். நாம் அங்கு செல்வோம். நம்முடைய வேலையை பார்ப்போம் என்று நினைத்தேன்.

யுகேந்திரன் விஜய்!
யுகேந்திரன் விஜய்!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் போது, “ கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு, நானும் விஜயும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பல வருடங்களுக்கு பின்னர் அவரை சந்திக்கச் செல்வதால், என்னுடனான பழைய நினைவுகள் அவருக்கு இருக்குமா? அவர் என்னிடம் எப்படி பழகுவார் உள்ளிட்ட பல யோசனைகள் என் மண்டையில் ஓடிக்கொண்டிருந்தன. 

ஒரு கட்டத்தில் நாம் எதையும் பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம். நாம் அங்கு செல்வோம். நம்முடைய வேலையை பார்ப்போம் என்று நினைத்தேன். சென்னையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அங்கு நான் சென்றவுடன் என்னை பார்த்த விஜய், வேகமாக வந்து கட்டிப்பிடித்து, எப்படி இருக்கிறீர்கள்… பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகி விட்டன என்றார்.

அதைப்பார்த்த உடன் எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. இந்த சமயத்தில் நான் இதனை சொல்கிறேன். என்னுடைய நண்பன் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நான் வில்லனாக நடிக்கிறேன். 

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக நான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன். கோட் படத்தில் கிட்டத்தட்ட 4 நாட்கள் விஜயுடன் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. 

அந்த 4 நாட்களுமே, அவர் எங்களுடன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். திருப்பாச்சி படத்தில், அவருடன் நடிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையெல்லாம் அவரிடம் காட்டினேன். அதைப்பார்த்த அவர் என்னை அப்படியே இருக்கிறீர்கள் என்றார். உடனே நான், நீங்கள்தான் கொஞ்சம் கூட உடம்பு போடாமல், அப்படியே இருக்கிறீர்கள் என்று சொன்னேன். 

அவர் வேண்டுமென்றே இப்படியெல்லாம் செய்யவில்லை அவரது இயல்பே அப்படியாக இருக்கிறது. அனைவரிடமும் அவர் அழகாக பழகுகிறார். காலையில் வந்த உடனே, அனைவருக்கும் குட் மார்னிங் சொல்லிவிட்டுதான் வேலையை ஆரம்பிப்பார்.

ரஷ்யாவில் மிக பயங்கரமான குளிர்; அவருக்கு மிகவும் லேசான ஆடையைதான் கொடுத்திருந்தார்கள். இருப்பினும், அவர் ஷீட்டிங் முடிந்தாலும் கேரவனுக்கு செல்லாமல் அப்படியே வெளியில் நின்று கொண்டிருந்தார். அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அப்படியான ஒரு உயரத்தில் இருந்து கொண்டு, ஒருவர் இப்படி இருக்க முடியுமா என்பதை, நான் ரஜினி சாரை பார்த்து வியந்திருக்கிறேன்; தற்போது விஜய் பார்த்து வைக்கிறேன். 

அவர் அடுத்ததாக எடுத்து வைக்கும் நடவடிக்கைகளுக்கு நம்முடைய வாழ்த்துகளை நாம் தெரிவித்துக்கொள்வோம். எது நடந்தாலும், அது யாருக்கும் எந்த வித கெடுதலையும் உருவாக்கி விடக்கூடாது என்பதில், அவர் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார். அது உண்மையில் சிறந்த குணம். 

எனக்கு வார்த்தைகளே இல்லை. அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. திருப்பாச்சி படத்தில் நடித்து 18 வருடங்கள் ஆகி விட்டன. நான் நடித்து 15 வருடங்கள் ஆகி விட்டன. இந்தப்படத்தில் பல விதமான கெட்டப்களில் நடித்திருக்கிறேன். இந்தப்படம் எனக்கு ஒரு கம் பேக் படமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்