தளபதீயாம்..அஜித்தே கடவுளேன்னு அஜித் சொல்லச் சொன்னாரா..? முகரக்கட்டை..இவனெல்லாம் கல்வி அமைச்சரானா’-விஜயை கிழித்த சாட்டை
அஜித்தே கடவுளேன்னு அஜித் சொல்லச் சொன்னாரா..?என்று சாட்டை துரைமுருகன் தமிழக வெற்றிக்கழக தொண்டர்களை சாடியிருக்கிறார்
பிரபல யூடியூபரும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவருமான சாட்டை துரைமுருகன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை கடுமையாக சாடி பேசி இருக்கிறார்.
இது குறித்து 4th Estate Tamil யூடியூப் சேனலுக்கு பேசிய சாட்டை துரைமுருகன், “தடை செய்யப்பட்ட தலைவரையே, எங்கள் தலைவராக அமர்த்தி, தடை செய்யப்பட்ட கொடியையே, இந்தியா உட்பட 64 நாடுகளில் பறக்க விட்டு இருக்கும் எங்கள் அண்ணன் சீமானைத்தான் தளபதி என்று அழைக்கவேண்டும்.
ஸ்டாலினையோ, உதயநிதி ஸ்டாலினையோ, விஜயையோ இங்கு நாம் தளபதி என்று அழைக்க முடியாது. குறிப்பாக மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இப்போதுதான் களத்தையே ஆய்வு செய்கிறார்கள். நாங்கள் கிட்டத்தட்ட 16 வருடங்களாக களத்தில் நிற்கிறோம். மக்களுடைய பிரச்சினைகளை தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். சீமான் வரும்போது எந்த அடைமொழியையும் போட்டுக்கொண்டு இங்கு வரவில்லை.
ஆனால் இவர்கள், வரும்பொழுதே அந்தத்தளபதி இந்தத்தளபதி இளைய தளபதி என்று பட்டம் போட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்த கலாச்சாரத்தை முதலில் உடைக்க வேண்டும். ரோகிணி திரையரங்கில் வரம்பு மீறி, நாற்காலிகளை உடைத்தது இந்த விஜய் ரசிகர்கள்தான். அதேபோல மாநாட்டில் நாற்காலிகளை உடைத்ததும் இந்த விஜய் ரசிகர்கள் தான். அவர்களுக்கு என்ன அறிவு இருக்கும்.
மாநாட்டில் சென்று அஜித்தே கடவுளே என்று கூறுகிறார்கள். அதை அஜித் விரும்புவாரா? அஜித் ஒரு சிறந்த மனிதநேயர். சாதியைத் தாண்டி, மதத்தைத் தாண்டி, மனிதர்களை இணைக்க முடியும் என்று நினைப்பவர். அவரை எங்களுக்கு பிடித்ததற்கான காரணம் என்னவென்றால், அவர் எல்லாவற்றையும் தாண்டி நிற்கிறார். ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அவர் மாட்டிக்கொள்ள மாட்டார். ஆனால் இவர்கள், அஜித்தே கடவுளே என்று அவர் விரும்பாத ஒரு செயலை செய்கிறார்கள்.
அவமானப் படுத்துகிறார்கள்.
அப்படிப்பட்ட ரசிகர்கள் அவரை அவமானப் படுத்துகிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். அஜித்தை கடவுளே என்று கத்துகிறார்கள். இதை அஜித் உங்களிடம் சொல்லச் சொன்னாரா? அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நாம் நாகரிகத்தை இந்த உலகத்திற்கு சொல்லிக் கொடுத்தவர்கள் அப்படிப்பட்ட நாம் இப்படி செய்யலாமா?
நான் பார்த்தேன்.. ரசிகர் ஒருவர் திரையரங்கிற்கு முன்னே நின்று தளபதி…. என்று வெறிகொண்டு கத்துகிறார். இவனெல்லாம் நாளைக்கு கல்வி அமைச்சராகவோ, சுகாதாரத்துறை அமைச்சராகவோ மாறினால் நாடு என்னவாகும். இந்த நாட்டை தரம் உள்ளவர்கள் ஆள வேண்டும். கடந்த 70 வருடங்களாக தரம் இல்லாதவர்கள் ஆட்சி செய்ததால்தான் இன்று நாம் இந்த நிலையில் இருக்கிறோம். ஒரு ரசிகர் மன்ற தலைவர் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தால், அவர் என்ன செய்வார். வெறுமனே படத்திற்கு விமர்சனம் தான் செய்து கொண்டு உட்கார்ந்திருப்பார்” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்