‘எவன் எவனோ பேசுறான்.. எனக்கு எல்லாம் பவர் இருந்தா ஏன் பேச விடப்போறேன்..’ ஆதங்கப்பட்ட யூடியூபர் இர்ஃபான்
யூடியூபர் இர்ஃபானுக்கு அரசியல் செல்வாக்கு அதிகம் உள்ளதால் தான் அவர் எல்லா விஷயங்களில் இருந்தும் தப்பிப்பதாக கூறுவோர்களுக்கு இர்ஃபான் பதிலளித்துள்ளார்.
பிரபல யூடியூபரான இர்ஃபான் கடந்த ஆண்டு அதிகம் சர்ச்சைகளில் சிக்கிய நபர்களில் ஒருவராக காணப்பட்டார். காரணம் அவர் வெளியிட்ட சில வீடியோக்கள் தான். கருவில் இருக்கும் பாலினத்தை அறிவிப்பது இந்தியாவில் சட்டப்படி குற்றம். ஆனால், இங்கு பாலினத்தை அறிய முடியாத காரணத்தால், இர்ஃபான் அவரது மனைவியுடன் வெளிநாடு சென்று பாலினத்தை அறிந்து கொண்டார்.
இர்ஃபான் வீடியோவால் பிரச்சனை
பிரச்சனை அதுவல்ல. இவர் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்டதை இவருடனும் குடும்பத்துடனும் நெருங்கிய நண்பர்களுடனும் வைத்திருந்தால் பிரச்சனை இல்லை. இவர் , குழந்தை பாலினத்தை கண்டுபிடித்ததையும், அதனை ரிவீல் செய்வதற்காக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியை அவரது யூடியூப் சேனலிலேயே போட்டது தான் பிரச்சனை.
வழக்கு பதிவு
இந்த வீடியோ வெளியான சமயத்தில் பல்வேறு தரப்பில் இருந்தும் யூடியூபர் இர்ஃபானுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. மேலும் அவர் மேல் புகாரும் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மேல் வழக்கு பதிவு செய்து, வீடியோவை நீக்க அரசு உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக அவர் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது.
தொப்புள் கொடியை கட் செய்த வீடியோ
இந்த பிரச்சனைக்கான சூழலே முடியாமல் இருந்த நிலையில், அடுத்த பிரச்சனையை தனக்காக ரெடி செய்தார் இர்ஃபான். இவர், தனது மனைவியின் பிரசவ காலத்தை வீடியோவாக பதிவு செய்து யூடியூபில் வெளியிட்டார். இங்கு பிரச்சனை எதில் ஆரம்பித்தது என்றால், மனைவிக்கு ஆறுதலாக நின்று கொண்டிருந்த இர்ஃபானை மருத்துவர் அழைத்து குழந்தையின் தொப்புள் கொடியை கட் செய்ய சொன்னது தான்.
இதையும் வீடியோவாக வெளியிட்டு தனக்கான அடுத்த பிரச்சனையை தானே தேடிக் கொண்டிருக்கிறார். இந்த விவகாரமும் வைரலான நிலையில், யூடியூபர் இர்ஃபான் மீதும் , சம்பந்தப்பட்ட மருத்துவர், மருத்துவமனை மீதும் நடிவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இர்ஃபானை நெருக்கடிக்கு தள்ளிய இந்த 2 விவகாரத்திலும் அவர் மீது எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம் அவருக்கு அரசியல் கட்சியின் துணை இருக்கிறது. பல முக்கிய புள்ளிகளை தன்வசம் வைத்திருப்பதால் தான் இதுபோன்று எல்லா பிரச்சனைகளில் இருந்தும் தப்பிக்கிறார் என்ற பேச்சுகளும் பெருமளவு அடிபட்டன.
பொறுமை இழந்த இர்ஃபான்
இந்நிலையில், இத்தனை நாட்களாக இந்த பிரச்சனைகள் குறித்து மௌனம் காத்து வந்த இர்ஃபான் முதல் முறையாக அவரது யூடியூப் சேனலில் விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில், இத்தனை நாள் என்மீது ஏகப்பட்ட புகார்கள் சுமத்தப்பட்டது. அதை வெளியில் இருப்பவர்கள், என்னை பற்றி தெரியாதவர்கள் பேசி இருந்தால் கூட என்னால் கண்டுகொள்ளாமல் இருக்க முடியும். என்னுடனே இருந்துவிட்டு, என்னைப் பற்றி எல்லாமே தெரிந்தவர்கள் எல்லாம் வெளியில் வேறு மாதிரி பேசுவதை என்னால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
என் வீட்டில் இருப்பவர்கள் என்னை .திட்டுவது பரவாயில்லை, என் மதத்தை வைத்து பல விஷயங்கள் மிகவும் மோசமாக பேசப்படுகிறது. ஒருவர் செய்யும் செயல் தான் அவர்களுக்கான மரியாதையை கொடுக்கும்.
இதற்கு மேல் தாங்க முடியாது
இத்தனா நாள் நான் அமைதியாக இருந்ததற்கு காரணம் வழக்கறிஞர்கள் இதுபற்றி பொதுவெளியில் பேசவேண்டாம் எனக் கூறியது தான். இப்போது அவர்கள் பேச்சையும் மீறி நான் இங்கே என் மனதில் உள்ளதை கூறுகிறேன். என்னால் இதற்கு மேல் தாங்க முடியாது.
எனக்கு அரசியல் கட்சியின் ஆதரவு இருப்பதாக எவன் எவனோ பேசுறான். என்னை பற்றி கேவலமாக எத்தனையோ வீடியோ வந்துவிட்டது. அதை எல்லாம் எவ்வளவு தவிர்த்தாலும் என்னைப் பற்றிய பேச்சுகள் குறையவே இல்லை. 2024ம் ஆண்டில் நான் பல இன்னல்களை சந்தித்து விட்டேன்.
அவர்களுக்கு என்ன பலன்?
எனக்கு அரசியல் பின்புலம் இருப்பதாக கூறுகின்றனர். அப்படி அரசியல் பின்புலம் இருந்தால் என்னைப் பற்றிய பேச்சுகளை வராமலே தடுத்திருக்க முடியும் அல்லவா? என்னைப் பற்றிய வீடியோக்களை முற்றிலும் தடை செய்திருக்கலாம் இல்லையா? எனக்கு உதவுவதால் அவர்களுக்கு எல்லாம் என்ன பயன்? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்