வைரலாகும் ரஜினி போஸ்ட்.. மறைமுகமாக திமுகவை எச்சரிக்கிறாரா? பற்ற வைக்கும் பிஸ்மி!
நடிகர் ரஜினிகாந்த்தின் புத்தாண்டு வாழ்த்து திமுகவை மறைமுகமாக எச்சரிக்கும் விதமாக அமைந்துள்ளதாக யூடியூபர் பிஸ்மி கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவு தான் பல இடங்களிலும் பேசு பொருளாகி இருக்கிறது. இதற்கு காரணம் அவர் பயன்படுத்திய வார்த்தைகள்.
பேசுபொருளான ரஜினியின் வாழ்த்து
ரஜினி வெளியிட்ட ட்வீட் பதிவில், "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வார்த்தைகள் ஒருவருக்கு வாழ்த்து கூறுபவை போல அல்ல என பலரும் கூறிவந்த நிலையில், வலைபேச்சு யூடியூபர் பிஸ்மியும் இதே கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், அந்த வார்த்தைக்கு பின் உள்ள காரணங்களையும் அவர் ஆகாயம் யூடியூப் சேனலில் கூறியிருக்கிறார்.
ரஜினி தான் பொறுப்பு
அந்த பேட்டியில், "நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து செய்தியை அட்மின் போட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. நம் வாயில் இருந்து வருகிற வார்த்தைக்கு நாம் தான் பொறுப்பாளி. அதே போலத்தான நம் சமூக வலைதள கணக்கிற்கும் பொறுப்பு.
எப்போதும் புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது மிகவும் நேர்மறையான வார்த்தைகளைத் தான் பயன்படுத்துவோம். அது மற்றவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகத் தான் இருக்க வேண்டும்.
திமுக அரசுக்கு எதிரான போஸ்ட்
ஆனால் , ரஜினி இப்போது போட்ட ட்வீட் வாழ்த்து மாதிரி தெரியவில்லை. யாரையோ அவர் எச்சரிப்பது போல் தான் இருக்கிறது. எனக்கு தெரிந்து அவர் ஆட்சியில் இருக்கும் திமுகவை மனதில் வைத்து இந்த பதிவை போட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இவர் நடிப்பதால் இவர் திமுகவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. இவருக்கும் ஸ்டாலின் குடும்பத்துக்கும் இடையே வெளியே தெரியாத விரிசல் இருக்கு.
இதெற்கெல்லாம் வாய்ப்பு இல்லை
கூலி படத்தில் நடிக்கும் சமயத்தில் கலாநிதி மாறன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட ஸ்டாலின் தரப்பு பற்றி எதாவது கூறி இருக்கலாம். அதன் விளைவாக அவர் இந்த மாதிரி ட்விட் போட்டிருக்கலாம்.
அவர் இதுபோன்ற எதிர்மறை ட்விட்களை போட வேறு எந்த காரணமும் இல்லை. அவர் விஜய் குறித்தோ, பாஜக குறித்தோ, அதிமுக குறித்தோ சொல்ல வாய்ப்பில்லை.
எந்தத் தகவலும் வெளியே வராது
கூலி படத்தின் அப்டேட் வந்தாலும் அந்த படத்தின் வணிக வியாபாரம் குறித்த தகவல்கள் வெளியில் வரவில்லை. காரணம் சன் பிக்சர்ஸ் அந்தத் தகவலை அவ்வளவு எளிதில் வெளியே விடாது. அதன் அதிகாரப்பூர்வ தகவல்கள் எல்லாம் வெளியேவே வராது.
உதாரணமாக, கூலி படத்தின் சாட்டிலைட் உரிமை எவ்வளவு என்பது நமக்கு தெரியாது. காரணம் அதை அவர்களே எடுத்துக் கொள்வர், டிவி உரிம விவரமும் தெரியாது. இசைக்கான உரிமமும் தெரியாது. ஏனென்னாறால் எல்லாவற்றையும் இவர்களே வாங்கிவிடுவார்கள். இதனால் கடந்த படத்திற்கும் இந்த படத்திற்குமான வசூலை மட்டும் தான் நம்மால் பேச முடியும்.
ரஜினி படம் அதிக வசூலை பெறாது
மற்ற படங்கள் எல்லாம் தமிழ்நாடு தியேட்டர்களிடம் விற்கும் போது அதற்கான தொகை குறித்து நமக்கு தெரியும். ஆனால், இவர்கள் ரெட் ஜெயண்ட் மூலமாக சொந்தமாக படத்தை ரிலீஸ் செய்வார்கள். இதனால் அவர்கள் குறித்த எந்த தகவலும் வெளியே வராது.
என்னதான் லோகேஷ் கனகராஜ் படத்தில் ரஜினி நடித்தாலும் அது விஜய் படத்தின் வசூலை முறியடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு தான். தமிழ் சினிமாவில் வியாபரத்திலும் வசூலிலும் நம்பர் ஒன் விஜய் தான்" எனக் கூறியுள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்