கவர்ச்சி நடிகைக்கு தேவையான வேலை எல்லாம் செய்தவர் தான் விக்கி! வேணும்னா அவர் கிட்டயே பேட்டி எடுங்க- கோர்த்து விட்ட பிஸ்மி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கவர்ச்சி நடிகைக்கு தேவையான வேலை எல்லாம் செய்தவர் தான் விக்கி! வேணும்னா அவர் கிட்டயே பேட்டி எடுங்க- கோர்த்து விட்ட பிஸ்மி

கவர்ச்சி நடிகைக்கு தேவையான வேலை எல்லாம் செய்தவர் தான் விக்கி! வேணும்னா அவர் கிட்டயே பேட்டி எடுங்க- கோர்த்து விட்ட பிஸ்மி

Malavica Natarajan HT Tamil
Dec 18, 2024 03:17 PM IST

விக்னேஷ் சிவன் இயக்குநராவதற்கு முன், கவர்ச்சி நடிகை வீட்டில் தங்கி இருந்து, அவருக்கு தேவையான வேலைகளை எல்லாம் செய்து வந்தார் என பிஸ்மி கூறி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

கவர்ச்சி நடிகைக்கு தேவையான வேலை எல்லாம் செய்தவர் தான் விக்கி! வேணும்னா அவர் கிட்டயே பேட்டி எடுங்க- கோர்த்து விட்ட பிஸ்மி
கவர்ச்சி நடிகைக்கு தேவையான வேலை எல்லாம் செய்தவர் தான் விக்கி! வேணும்னா அவர் கிட்டயே பேட்டி எடுங்க- கோர்த்து விட்ட பிஸ்மி

இதையடுத்து, இந்தத் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதில் தொடங்கிய சர்ச்சை இப்போது, திருமண வீடியோவை வெளியிட்டது வரா தொடர்கிறது.

தனுஷுடன் பிரச்சனை

முன்னதாக, இவர்களது திருமணம், நயன்தாராவின் சினிமா பயணம் என தனது வாழ்க்கை வரலாற்றை நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல் ஆவணப்படமாக வெளியிட தம்பதியினர் திட்டமிட்டிருந்தனர். இதற்காக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திடம் ரூ.25 கோடிக்கு வீடியோ உரிமையையும் அளித்திருந்தனர்.

அந்த வீடியோவில் நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தியதால், தனுஷ் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதி மீது வக்கீல் நோட்டீஸ் அளித்தார். அத்துடன் ரூ.10 கோடி நஷ்ட ஈடும் கேட்டிருந்தார்.

இதனால், கோபமடைந்த நயன்தாரா 3 பக்கத்திற்கு தனுஷை திட்டி ஒரு அறிக்கையும், விக்னேஷ் சிவன், மேடைகளில் பேசும்படி நடந்து கொள்ளுமாறு கூறி வக்கீல் நோட்டீஸுடன் இணைத்து வீடியோவும் வெளியிட்டார்.

3 குரங்குகள்

இதையடுத்து இவரை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நயன்தாரா சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் சேனலுக்கு அளித்த பேட்டி வைரலானது. அந்தப் பேட்டியில், வலைப்பேச்சு யூடியூப் சேனலில் உள்ளோரை 3 குரங்குகள் என விமர்சித்தார். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் நயன்தாராவையும் அவரது கணவர் விக்னேஷ் சிவனையும் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

கவர்ச்சி நடிகைக்கு உதவி

மேலும், நயன்தாரா பற்றி பல விஷயங்களை வெளியில் சொல்ல நேரிடும் எனக் கூறி வந்தனர். இந்நிலையில், விக்னேஷ் சிவன் பற்றி பேசிய பிஸ்மி, விக்னேஷ் சிவன் வெற்றிப்பட இயக்குநர் அல்ல. அவரின் முதல் படமான போடா போடி பிளாப்பான படம். இதனால், அவர் அடுத்தடுத்து எந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் கஷ்டப்பட்டு இருந்தார்.

இதனால் அவர் கவர்ச்சி நடிகையான சோனா வீட்டில் தங்கி இருந்து அவருக்கு தேவையான வேலைகளை எல்லாம் செய்து வந்தார். இதை எல்லாம் நானாக சொல்லவில்லை. வேண்டுமென்றால் சோனாவிடமே நீங்கள் ஒரு இன்டர்வியூ எடுத்தால் அவரே நிறைய கதைகளை சொல்லுவார் என்றார்.

இவரது இந்தப் பேச்சு தான் இப்போது கோலிவுட் முழுவதும் பேசுபொருளாக உள்ளது. மேலும், நெட்டிசன்கள் பலரும் தன்னை சுற்றி நடக்கும் பிரச்சனைகளுக்கு விளக்கம் அளிக்கும் விக்னேஷ் சிவன் இதற்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

அவரை கல்யாணம் செய்யாமலே இருந்திருக்கலாம்

முன்னதாக ஹாலிவுட் ரிப்போர்ட் சேனலுக்கு நயன்தாரா அளித்த பேட்டியில், "விக்னேஷ் சிவனை திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாமோ என யோசித்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். அவர் அளித்த பேட்டியில், நான் பல நேரங்களில் விக்னேஷ் சிவனை கல்யாணம் செய்யாமல் இருந்திருக்கலாம். நாங்கள் ஒன்றாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று யோசித்திருக்கிறேன்.

நான் தான் அவரை காதலித்தேன். அவரை திருமணம் செய்து கொள்ள நினைத்தேன், ஒருவேளை அவர் என்னை திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் ஒரு இயக்குநராக, பாடலாசிரியராக, எழுத்தாளராக அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கிகாரத்தை பெற்றிருப்பார்." என்றார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.