'கேவலப்படுத்தும் நயன்தாரா.. முதுகெலும்பே இல்லாதவர்கள்.. தலையாட்டி பொம்மை' விளாசும் பிஸ்மி
நடிகை நயன்தாரா தனது செயல்கள் மூலம் சினிமாவையே கேவலப்படுத்தி வருகிறார் என பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி விமர்சித்துள்ளார்.
நயன்தாரா தனுஷிற்கு எழுதிய கடிதத்தில் இருந்து அவர் பற்றிய செய்திகளும் வதந்திகளும் வெகுவாக பரவி வரும் நிலையில், நயன்தாரா வலைப்பேச்சு யூடியூபர்கள் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதையடுத்து வலைப்பேச்சு யூடியூபர்ஸ் நயன்தாராவை பயங்கரமாக விமர்சிக்கத் தொடங்கினர். இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான வலைப்பேச்சு பிஸ்மி, நயன்தாரா குறித்து மீடியா சர்க்கிள் எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
முதுகெலும்பற்ற தயாரிப்பாளர்கள்
அந்தப் பேட்டியில், "நயன்தாரா ஷூட் முடிந்ததும் எனக்கும் ஒரு மானிட்டர் போட வேண்டும் எனக் கேட்பது குறித்து நான் அவர்களை தப்பு சொல்ல மாட்டேன். தயாரிப்பாளர்கள் முதுகெலும்பு இல்லாதவர்களாக இருக்கின்றனர்.
கேமரா மேனும், டைரக்கடரும் ஒரு சீன் சரியா வருதான்னு செக் பன்ன மானிட்டர் பாப்பாங்க. இந்த சிஸ்டம் 90களில் தான் வருது. அதுக்கு முன்ன வியூ பைண்டர்ல தான் பாப்பாங்க.
இப்படி இருக்கையில், எனக்கும் தனியா மானிட்டர் வேணும், என் சார்பில் என் மேக்கப் மேனும், ஹேர் ட்ரெஸரும் பார்க்கனும். அதுக்காக மானிட்டர் தரணும்ன்னு சொன்னா எப்படிங்க?
சினிமாவை கேவலப்படுத்தும் நயன்தாரா
இந்த மாதிரியான செயல்கள் சினிமாவையே கேவலப்படுத்துவது மாதிரி இருக்கு. ஒரு இயக்குநர் தான் படத்தின் தூண், ஆனால். அவரை தவிர, கேமரா மேனைத் தவிர என் காட்சிகள் எப்படி வந்திருக்கு என்பதை என் மேக்கப் மேன் தான் பாக்கனும்ன்னு சொன்னா மொத்த படத்தையும் அசிங்கப்படுத்துற மாதிரி தான் இருக்கு.
ஆனா, நயன்தாரா இந்த மாதிரி கேக்கும் போதே இயக்குநரும் தயாரிப்பாளரும் முடியாதுன்னு சொல்லிருக்கணும். இஷ்டம் இருந்தா நடிங்க இல்லன்னா போயிட்டே இருங்கன்னு சொல்லிருக்கனும்.
சம்பளம் கொடுப்பதே கேவலம்
இன்னும் சொல்லப் போனால், தான் நடித்த படத்தோட புரொமோஷனுக்கே வரமாட்டேன் என சொல்லும் நடிகைக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதே கேவலம்.
இவங்களுக்கு மார்க்கெட் இருந்தா கூட பரவாயில்ல, அதுவும் இல்ல. நானும் ரவுடி தான், மூக்குத்தி அம்மன்னு ரெண்டு படம் இல்லன்னா 3 படம் தான் அவங்க 10 வருஷத்துல கொடுத்த ஹிட்.
எப்படி நம்புறாங்கன்னே தெரியல
அவரை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் எல்லாம் எங்கன்னே தெரியல. நயன்தாராவை முதன்மை கதாப்பாத்திரமாக நிறுத்தி படம் எடுத்த பல இயக்குநர்கள் காணாமல் போயிட்டாங்க. இவரை வைத்து எடுத்த படம் எல்லாம் தோல்வியை சந்தித்தது. இதனால், எல்லாம் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. நிலைமை இப்படி தான் இருக்கு. ஆனா, நயன்தாரா தன்னை சுற்றி கட்டமைத்து இருக்கும் பிம்பத்தை எப்படி சினிமாகாரங்களே நம்பி படம் எடுக்குறாங்கன்னு தெரியல.
அன்னபூரணின்னு ஒரு படம். அந்தப் படத்தோட லாப நஷ்டம் என்னனு தயாரிப்பாளர்கிட்ட போய் கேட்டா தான தெரியும்.
பட்டிமன்றமே நடக்கும்
நயன்தாரா திருமணத்திற்கு பின் தான் இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்குகிறார். விக்னேஷ் சிவனால் அவர் கெட்டாரா, அல்லது நயன்தாராவால் விக்னேஷ் சிவன் கெட்டாரா என்பதை விசாரித்தால் பட்டிமன்றமே வைக்கலாம்.
ஆனால், கேள்விப்பட்டவரை, நயன்தாரா தனுஷ் விஷயத்தில் என்ன சொன்னாளும் கேட்காமல் இருக்கிறார். ரொம்ப பிடிவாதமாக இரு்கிறார் என விக்னேஷ் சிவன் அவரது நண்பர்களிடம் புலம்பி உள்ளாராம்.
அதே சமயத்தில், தனுஷ் பற்றிய கடிதத்தில் தனுஷின் அப்பா அண்ணனை பற்றி எல்லாம் எழுதியது விக்னேஷ் சிவனாகத் தான் இருக்கும். இவர் நயன்தாராவின் தலையாட்டி பொம்மையாக இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்து வருகிறது" என்றார்.
டாபிக்ஸ்