'அஜித் ரசிகர்கள் பூமியின் சுமைகள்.. சமூகத்திற்கே ஆபத்தானவர்கள்..' சொந்த வாயால் சூனியம் வைத்துக் கொண்ட பிஸ்மி
விடாமுயற்சி படம் தள்ளிப் போனது குறித்து தன்னை விமர்சித்த ரசிகர்களை யூடியூபர் பிஸ்மி பூமியின் சுமைகள் என விமர்சித்துள்ளார்.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார்- திரிஷா நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படம் படப்பிடிப்பு சமயத்திலேயே பல பிரச்சனைகளை சந்தித்ததால் குறிப்பிட்ட நாளை விட படப்பிடிப்பு மிகவும் தள்ளிப் போனது.
இதையடுத்து இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு படப்பிடிப்பு முழுமையாக முடிந்திருப்பினும் ரிலீஸில் அடுத்த சிக்கல் வந்தது. படப்பிடிப்புகள் எல்லாம் தாமதமாக முடிந்ததால் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இன்னும் முடியவில்லை. அதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம். அல்லது விடாமுயற்சி படத்திற்கு முன்னரே குட் பேட் அக்லி படம் வெளியாகலாம் என கூறப்பட்டு வந்தது.
லைகாவின் அதிர்ச்சி அறிவிப்பு
இந்நிலையில், விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. அதுமட்டுமின்றி, அஜித் ரசிகர்கள் குஷியாக்கும் விதமாக டீசர், முதல் சிங்கிள் என அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்து வந்தது. இந்த அறிவிப்புகளால் குஷியாக இருந்த அஜித் ரசிகர்களை ஒரே ட்விட் மூலம் ஆஃப் செய்துள்ளது லைகா தயாரிப்பு நிறுவனம். ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த கையோடு, அதே பதிவில் தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப் போகிறது என்றும் கூறி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு ஆப்பு வைத்தது.
இந்த சமயத்தி, விடாமுயற்சி படம் ரிலீஸ் குறித்து ஆகாயம் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த யூடியூபர் பிஸ்மி, படம் தள்ளிப் போனதற்கான காரணங்களை விளக்கியதுடன் அஜித் ரசிகர்களை விமர்சித்துள்ளார்.
மூளை மழுங்கி போன ரசிகர்கள்
அஜித் ரசிகர்கள் படம் ரிலீஸ் ஆன தியேட்டர்ல போய் பாருங்க. இல்லையா வேற வேலைய பாருங்க. இதுக்கு எதுக்கு இடிஞ்சி போகனும். ஒரு படம் எடுக்குறது சாதாரணம் இல்ல. அதுவும் அஜித் மாதிரியான நடிகர வச்சு படம் எடுக்குறது ரொம்ப கஷ்டம்.
ஆனா இந்த மூளை மழுங்கி போன ரசிகர்கள் நாம் பொறாமையில் பேசுவதாக கூறுகின்றனர். படம் ரிலீஸ் தள்ளப்போவதை கூட ஏற்க முடியாமல் இருப்பவர்கள் எல்லாம் பூமியின் சுமைகள்.. இவர்கள் இருப்பது சமூகத்திற்கே ஆபத்து தான்.
தெரிஞ்ச தகவலை தான் சொல்றோம்
விடாமுயற்சி படத்துல பல பிரச்சனை இருக்கு. முதல்ல இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சனை ஆனது. அடுத்தது கதை திருட்டு பிரச்சனை, லைகாவுக்கு இருக்க பணப் பிரச்சனை ரொம்ப அதிகம். விடாமுயற்சி ரிலீஸ் பண்றதுக்கு முன்னாடி பல கோடி ரூபாய் செட்டில் பண்ண வேண்டிய சிக்கலும் இருக்கு. சினிமாவுல இருக்க நண்பர்கள் மூலமா கிடைக்குற தகவல தான் நாம சொல்றோம்.
மகிழ் திருமேனிக்கு செக் வைத்த லைகா
குட் பேட் அக்லி படம் ஆரம்பிக்கும் போதே பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று தான் சொன்னார்கள். ஏனென்றால் விடாமுயற்சி படம் அதற்கு முன்னதாக வெளியாகும் என நினைத்தார்கள். ஆனால், மகிழ் திருமேனிக்கும் லைகாவிற்கும் உள்ள பிரச்சனையால் அவர்கள் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படுத்தினர். மகிழ் திருமேனிக்கு வாய்ப்பு கிடைத்தால் இன்னும் 5 வருடம் கூட படம் எடுப்பார் என நினைத்த லைகா ரிலீஸ் தேதியை அறிவித்தது. அப்படி செய்தால் படம் விரைவில் எடுத்து முடிக்கப்படும் என நினைத்தது.
விடாமுயற்சியால் பாதிக்கப்பட்ட படங்கள்
விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகாததால பாதிக்கப்பட்டது குட் பேட் அக்லி படம் அல்ல. பாதிக்கப்பட்டது மற்ற நடிகர்களின் படங்களும், சின்ன பட்ஜெட் படங்களும் தான். வீர தீர சூரன் படம் எல்லாம் பொங்கல் ரிலீஸ்ன்னு டீசர் எல்லாம் ரெடி பண்ணிருந்தாங்க. அப்புறம் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ்ன்னு சொன்னதால அவங்க அப்படியே ரிலீஸை தள்ளி வச்சிட்டாங்க. இன்னொன்னு பாலாவோட வணங்கான் படம். விடாமுயற்சி படத்தால பாலாவ யாரும் கண்டுகவே இல்ல. இப்போ வேற எந்த படமும் இல்லாததுனால எல்லாரும் பாலா பின்னாடி போறாங்க.
நயன்தாரா சாபமா?
அஜித் , விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்காமல் போனதால் நயன்தாரா விட்ட சாபம் தான் இப்படி எல்லாம் நடந்ததற்கான காரணம் என்ற பேச்சு எல்லாம் பொய். இந்தப் படம் தாமதத்திற்கு இயக்குநரும் தயாரிப்பு நிறுவனமும் அஜித்தும் தான் காரணம் என அழுத்தம் திருத்தமாக கூறினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்