GV Prakash: ப்ளூ சட்டை மாறனை தொடர்ந்து இயக்குநரான பிக் பாஸ் பிரபலம் கம் சினிமா விமர்சகர்! ஹீரோவாக ஜிவி பிரகாஷ்
ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் பிரபல தொகுப்பாளர், சினிமா விமர்சகர், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான அபிஷேக் ராஜா.
கோலிவுட்டில் யூடியூப் பிரபலங்கள் சினிமாவில் நடிப்பதும், இயக்கம், திரைக்கதை உள்பட பணிகளில் பங்கெடுப்பதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பின்னர் சினிமா விமர்சகராக உருவெடுத்தவர் அபிஷேக் ராஜா. இவர் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியலும் போட்டியாளராக பங்கேற்றார். யூடியூப்பராக இருந்து வரும் அபிஷேக் ராஜா தற்போது இயக்குநராக உருவெடுத்துள்ளார்.
இவர் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்துக்கு ஸ்டார் டா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது சினிமாவா அல்லது வெப் சீரிஸா என்பது குறித்த தகவல் வெளியாகிவில்லை.
இதற்கிடையே அபிஷேக் ராஜா இயக்கத்தில் உருவாகும் ஸ்டார் டா மியூசிக் விடியோவாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது போஸ்டர் மட்டும் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், விரைவில் இதன் அடுத்த அப்டேட்டில் முழு விவரமும் தெரியவரும்.
இந்த ஸ்டார் டா போஸ்டரில் பைக் சாவியை சுழட்டியவாறு சீரியஸான லுக்கில் ஜிவி பிரகாஷ் உள்ளார். ஸ்டார் டா, தொழில்நுட்ப குழுவில் கேசி பாலசாரங்கன் இசையமைக்கிறார். ஜெகதீஷ் சுதாராமூர்த்தி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
யூடியூப்பில் ஏராளமான சினிமா விமர்சகர்கள் இருந்து வரும் நிலையில், அவர்களில் பலரும் பிரபலமானவர்களாக உள்ளனர். யூடியூப் விமர்சகரும், ஏராளமான பாலோயர்களையும் கொண்டிருக்கும் ப்ளூ சட்டை மாறன் இயக்குநராக உருவெடுத்து ஆன்டி இண்டியன் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார்.
இவரை தொடர்ந்து தற்போது மற்றொரு யூடியூப் விமர்சகரான அபிஷேக் ராஜா இயக்குநராக உருமாறியுள்ளார்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பு, நடிப்பு என இரண்டையும் சிறப்பாக செய்து வருகிறார். பொங்கலுக்கு இவரது இசையமைப்பில், தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கேப்டன் மில்லர், ஏ. எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் மிஷன்: சேப்டர் 1 ஆகிய படங்கள் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டில் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் டியர், ரீபல், கல்வன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்