'வயசானா அதெல்லாம் பண்ண கூடாதா?..என்ன பூமர்ன்னு சொல்லுவாங்க..' சரத் குமார் ஷேரிங்ஸ்
நடிகர், அரசியல்வாதி, வயதானவர் என்ற கோட்டுக்குள் என்னை நிறுத்த முடியாது. என்னால் அனைத்தையும் செய்ய முடியும் என சரத் குமார் கூறியுள்ளார்.
நடிகரும் அரசியல்வாதியுமான சரத் குமார் சமீபத்தில் தனது 150வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த சமயத்தில் அவர் ரெட் நூல் யூடியூப் சேனலுக்கு தனது குடும்ப வாழ்க்கை பற்றியும் சினிமா வாழ்க்கை பற்றியும் பேசியுள்ளார்.
ஒழுக்கம் ரொம்ப முக்கியம்
அந்த பேட்டியில் பேசிய சரத் குமார்"வாழ்க்கையில ரொம்ப முக்கியமானது ஒழுக்கம். நான் 70 வயசு ஆகியும் இன்னும் இளமையா இருக்க காரணம் எங்க அப்பா அம்மா வழியா வந்த ஜீன். அவங்க கத்துக்கொடுத்த பாடம். எங்க அப்பா சின்ன வயசுலயே உடல் ஆரோக்கியம் தான் ரொம்ப முக்கியம்ன்னு சுத்தியால அடிச்ச மாதிரி சொல்லிட்டாரு. அதுனால தான் தினமும் ஒர்க் அவுட் பண்ணிட்டு இருக்கேன்.
திருமணம் ஆகுறதோ, விவாகரத்து ஆகுறதோ இல்ல மறுபடியும் திருமணம் பண்றதையோ நாம எப்படி பாக்குறோம்ங்குறதுல தான் இருக்கு. எனக்கும் கல்யாணம் ஆச்சு. அவங்கள பிரிஞ்சு அடுத்த கல்யாணம் பண்ணிருக்கேன்.
எந்த அசௌகரியமும் இல்ல
மனம் ஒத்து கல்யாணம் பண்ணி பலபேரு பிரிஞ்சிருக்காங்க. அதேசமயம் பிரிஞ்ச எத்தனையோ பேர் மறுபடியும் மனம் ஒத்து வாழுறாங்க. எனக்கு ராதிகா கூட கல்யாணம் ஆனாலும் என்னோட முதல் மனைவி அவங்க குழந்தைங்க எல்லாரும் ஒன்னா தான் இருக்கோம். என்னோட முதல் மனைவி ராதிகா என் கூட இருக்குறதால எந்தவிதமான அசௌகரியத்தையும் உணரல. அதேசமயம் ராதிகா எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணுனாங்க. சரத்குமாருக்கு பொன்னுன்னா எனக்கும் பொன்னு தான்னு அவங்க நெனச்சாங்க. அதேசமயம் அம்மா இல்லாம எப்படி வரலட்சுமி கல்யாணத்த நடத்த முடியும்ன்னு யோசிச்சாங்க.
ராதிகா குடும்பம் முக்கியம்ன்னு நெனச்சாங்க
அதுனால அவங்க என்னோட முன்னாள் மனைவி, இப்போ எப்படி ஒன்னா இருக்க முடியும்ன்னு எல்லாம் நெனக்கல. குடும்பத்துக்கு அவங்க முக்கியத்துவம் கொடுத்தாங்க. குடும்பம் தான் எல்லாம்ன்னு நெனச்சாங்க. அத ராதிகா நிரூபிச்ச இடம் தான் வரலட்சுமியோட கல்யாணம்.
சில விஷயத்த மறக்கணும் சில விஷயத்த மன்னிக்கனும். எல்லாரும் எவ்ளோ நாள் வாழப்போறோம். எல்லோரும் நல்லா வாழனும். சந்தோஷமா இருக்கணும். யாருக்கும கெட்டது நெனக்காம இருக்கணும். அப்படி பாத்தா என்னோட குடும்பம் யாருக்கும் கெட்டது நெனச்சது இல்லை. அதுக்காக நான் கடவுளுக்கு தான் நன்றி சொல்லனும்.
வரலட்சுமி ஃபேவரட்டா?
என்னோட 4 குழந்தைகளுமே எனக்கு ரொம்ப ஸ்பெஷல் தான். ஆனா வீட்ல இருக்கவங்க நினைக்குறது என்னன்னா வரலட்சுமி தான் என்னோட ஃபேவரைட் பொன்னுன்னு. ஆனா அது அங்க நெனச்சுக்குறது தான். உண்மையா எனக்கு அப்படி எல்லாம் இல்ல. எல்லாரும் ஒன்னு தான்.
வீட்ல எல்லாரும் நல்லா படச்சவங்க. அதனால் அவங்களுக்கு நாம ஒரு நடிகரோட பிள்ளைங்க அப்டிங்குற எண்ணமே மனசுல இருக்காது. அவங்க எதையும் எதிர்பார்க்கவும் மாட்டாங்க. அவங்களுக்கு வேணும்னா ஆட்டோ எடுத்துட்டோ, பஸ்லயோ கிளம்பி போயிடுவாங்க. அவங்க வாழ்க்கைன்னா என்னென்னு புரிஞ்சிகிட்டாங்க. அது எனக்கு பெருமையா இருக்கு. அவங்க எல்லாம் கடவுள் எனக்கு கொடுத்த கிஃப்ட். ஒரு அப்பாவா பிள்ளைங்க கிட்ட ஒரு வயசுக்கு மேல அட்வைஸ் பண்ணா அது பூமர் தான். அதெல்லாம் இப்போ சாதாரணமாகிடுச்சி.
ராதிகாவ வச்சி டைரக்ட் பண்ணனும்
எனக்கு டைரக்டர் ஆகணும்ன்னு ஆசை. அது ஒரு முழு நேர வேலை. அந்தப் படத்துல நான் நடிக்க கூட வேணாம். ஆனா, நான் மனசுல நெனச்சது படமா வெளிய வந்தா மட்டும் போதும். ராதிகாக்கு உலகத்துல இருக்க எல்லா டேலண்ட்டும் இருக்கு. அவங்கள வச்சு வித்யாசமான படம் பண்ணனும்ன்னு ஆசை. அது ஏன் வந்துச்சுன்னு தெரியாது. பெண்கள் சம்பந்தமான வித்யாசமான கதை அவங்கள வச்சு பண்ணனும்.
இதெல்லாம் பண்ண கூடாதா?
நீ நடகரா இருக்க, நீ அரசியல்வாதியா இருக்க. உனக்கு வயசாகிடுச்சு நீ இதெல்லாம் பண்ணலாமாங்குற கேள்வி எல்லாம் எனக்குள்ள வராது. நம்ம எந்த சூழ்நிலையில இருந்தாலும் அப்படியே போகணும். நாங்க டோக்கியோல பழைய நண்பர்கள் எல்லாம் ஒன்னா இருந்தோம். ஊர் சுத்தினோம். அந்த நேரத்த கெடுக்க விரும்பல. அதனால நாங்க எல்லாம் ரீல்ஸ் எடுத்து ஜாலியோ ஷேர் பண்ணோம் என்றார்.
டாபிக்ஸ்