‘அதிக நாட்கள் கால்ஷீட்..’: விஜய்சேதுபதியின் ‘ஏஸ்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த யோகி பாபு
300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல காமெடி நடிகர் யோகி பாபு, தன்னுடைய சினிமா பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமையும் வகையில், ஏஸ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ருக்மினி வசந்த் மற்றும் யோகி பாபு நடித்திருக்கும் ‘ஏஸ்’ படத்தில், நடிகர் யோகி பாபு ஒரு முக்கிய திருப்புமுனை தரும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக படக்குழுவினர் கூறியிருக்கின்றனர்.
2018ஆம் ஆண்டு,வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ திரைப்படத்தின் இயக்குநர் ஆறுமுக குமார். இவர் அப்படத்துக்குப் பின், மீண்டும் விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து, இயக்கிய படம் தான், ‘ஏஸ்’. இப்படத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வளர்ந்து வரும் ருக்மினி வசந்த், தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.
இப்படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், திவ்யா பிள்ளை, பி.எஸ்.அவினாஷ், முத்து குமார், ராஜ் குமார், தினேஷ் குமார், பிரிஷில்லா நாயர், ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜெய், நகுலன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.