தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Yodha Box Office Collection Day 2 And Sidharth Film Mints Nearly 10 Cr In Two Days

Yodha Box Office: 2 நாளில் கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வசூல் செய்த சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ராஷி கண்ணா நடித்த ‘யோதா’!

Marimuthu M HT Tamil
Mar 17, 2024 04:27 PM IST

Yodha Box Office Collection Day 2: 'யோதா’ இந்தப் படம் இந்தியாவில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இப்படத்தை சாகர் ஆம்ப்ரே மற்றும் புஷ்கர் ஆகியோர் சேர்ந்து இயக்கியுள்ளனர்.

யோதா படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா!
யோதா படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா!

ட்ரெண்டிங் செய்திகள்

யோதா படத்தின் வசூல் நிலவரம்:

யோதா இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரிலீஸான முதல் நாளில்  4.1 கோடி ரூபாயை வசூலித்தது. ஆரம்ப மதிப்பீடுகளின்படி, இரண்டாவது நாளில், இது இந்தியாவில்  5.75 கோடி ரூபாயை ஈட்டியது. இதுவரை இப்படம் இந்தியாவில் 9.85 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

யோதா படம் எத்தகையது?:

யோதா அறிமுக இயக்குநர்களான சாகர் ஆம்ப்ரே மற்றும் புஷ்கர் ஓஜா ஆகியோர் இயக்கிய படம் ஆகும். யோதா டாஸ்க் ஃபோர்ஸ் என்ற உயரடுக்கு பாதுகாப்புப் பிரிவின் கட்டளை அதிகாரியான அருண் கத்யால் ஒரு பரபரப்பான மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறார். அப்போது நடக்கும் நிகழ்வுகளைத் தொகுத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஹிரூ யாஷ் ஜோஹர், கரண் ஜோஹர், அபூர்வா மேத்தா மற்றும் ஷஷாங்க் கைதான் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

யோதா குறித்து சித்தார்த் மல்ஹோத்ரா:

சமீபத்தில், டெல்லி நிகழ்ச்சி ஒன்றில் சித்தார்த் மல்ஹோத்ரா யோதா படம் குறித்து பேசினார். அதில் அவர் அளித்துள்ள பேட்டியில், "யோதா முற்றிலும் கற்பனையான கதை. நாங்கள் ஒரு புதிய பணிக்குழுவை உருவாக்கியுள்ளோம். அதன்பெயர், யோதா. எனவே, நீங்கள் பூஜ்ஜியத்திலிருந்து எதையாவது உருவாக்கும்போது, நீங்கள் நிறைய சுதந்திரமாக செய்வீர்கள். நாங்கள் படத்தில் பல மாறுபாடுகளைச் செய்துள்ளோம். 

மேலும் ஷெர்ஷா படத்திற்குப் பின், இப்படத்தில், நான் நடித்தது மிகவும் வித்தியாசமான பாணியில் ஆனது. இங்கே நான் அதிக ஆற்றலுடனும், பல்வேறு வகையான ஆயுதங்களைப் பயன்படுத்துகிறவனாகவும் நடித்துள்ளேன். இது மிகவும் கமர்ஷியல் மற்றும் பொழுதுபோக்கு படம். கடந்த பத்தாண்டுகளில் நான் செய்த சிறந்த அதிரடி காட்சிகள் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது என்று நினைக்கிறேன்" என்றார்.

யோதா

சித்தார்த் மல்ஹோத்ராவின் மனைவியும் நடிகையுமான கியாரா அத்வானி மார்ச் 14ஆம் தேதி இரவு மும்பையில் நடந்த சிறப்புத் திரையிடலில் தனது முழு குடும்பத்துடன் கலந்துகொண்டு, யோதா படத்தைப் பார்த்தார். அதன்பின், தனது இன்ஸ்டாகிராம் கதைகளில், எழுதிய கியாரா, "கரண் ஜோஹர், சித்தார்த் மல்ஹோத்ரா, தர்ம மூவிஸ் தயாரிப்புக்குழுவினர் ஆகிய நீங்கள் அனைவரும் சேர்ந்து மிகவும் எங்களைப் பெருமைப்படுத்தி உள்ளீர்கள். யு ஆர் பெஸ்ட்." என்றார்.

மேலும் யோதா படத்தின் முன்னணி கதாநாயகிகளையும், படத்தின் இயக்குநர்களையும் பாராட்டிப் பேசினார். "இந்த ஜானரில் படம் எடுத்து சிறந்தவர்களில் சாகர் ஆம்ப்ரே மற்றும் புஷ்கர் ஓஜாவும் குறிப்பிடத்தக்கவர். இது உங்கள் இயக்கத்தில் முதல் படம் என்று நம்பமுடியவில்லை. இந்த ரெண்டு கதாநாயகிகளையும் யோதா படத்தில் நிச்சயம் ரசிப்பீர்கள். படத்தின் ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் என்னுடைய வணக்கங்கள்" என்று கியாரா தெரிவித்தார். 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்