Yashika anand: மார்பில் பச்சைக்குத்திய ரசிகர்.. ‘ ‘அய்யோ எவ்வளவோ வலிச்சிருக்கும்’ - யாஷிகா ஆனந்த் பதில்!
Yashika anand: எனது புகைப்படத்தை ரசிகர் ஒருவர் நெஞ்சில் பச்சை குத்திய புகைப்படத்தை பார்த்தேன். அவ்வாறு செய்த போது எவ்வளவு வலித்திருக்கும். - யாஷிகா பதில்

Yashika anand: திரையுலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா. பல திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றாலும், பிக்பாஸ் சீசன் 2 வும், ' ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ' என்ற அடல்ட் காமெடி படமும் இவரைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் தன்னுடைய ரசிகர் ஒருவர் செய்த செயலுக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதில் கொடுத்திருக்கிறார்.
ரசிகருக்கு பதில்
ஆம், யாஷிகாவின் ரசிகர் ஒருவர் அவரின் புகைப்படத்தை தன்னுடைய மார்பில் பச்சைக்குத்தி, அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், இதனைப்பார்த்த யாஷிகா ஆனந்த், எனது புகைப்படத்தை ரசிகர் ஒருவர் நெஞ்சில் பச்சை குத்திய புகைப்படத்தை பார்த்தேன். அவ்வாறு செய்த போது எவ்வளவு வலித்திருக்கும். ஏன் இப்படி செய்கிறீர்கள். உங்களது அம்மாவை சந்தோஷப்படுத்துங்கள். அதுதான் எனக்கு சந்தோஷம்.’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
யாஷிகா ஆனந்திடம் எம்.ஏ.பாலா எழுதி இயக்கும் X Ray கண்கள் மற்றும் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிடி நெக்ஸ்ட் லெவல் படங்கள் கைவசம் இருக்கின்றன.
இதையும் படிக்க: -Yashika Anand: அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரியா? - யாஷிகா பதில்!
முன்னதாக, கடந்த ஆண்டு சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் யாஷிகா சிக்கினார். அந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்திற்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் ஆறு மாதங்களாகச் சிகிச்சை பெற்று மீண்டார்.
யாஷிகாவிற்கு கை, கால், இடுப்பு பகுதிகளில் எலும்புகள் முறிந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் விபத்தில் அவரது நெருங்கிய தோழியான பவனி ஷெட்டி என்பவர் உயிரிழந்தார். விபத்தில் இருந்து மீண்ட யாஷிகாவால் தன் தோழியின் இழப்பிலிருந்து மீண்டு வர முடியவில்லை. தன் தோழியின் உயிரிழப்பிற்கு தானே காரணமாகி விட்டேன் என பல முறை அவர் ரசிகர்களிடம் அழுது பதிவுகளை வெளியிட்டார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்