Yash on Ramayana: 80 கோடி வரை சம்பள பேரம்.. பிடி கொடுக்காத யாஷ்.. ராவணனன் கேரக்டரில் அவர் நடிக்கிறாரா இல்லையா?
செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வெளியிட்டு இருக்கும் தகவலின் படி கும்பகர்ணன் கதாபாத்திரத்தில் பாபி தியோலை நடிக்க வைக்க படக்குழு அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. ராவணனின் தம்பி விபீஷணன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது
பிரபல இயக்குநர் நிதேஷ் திவாரி சமீபத்தில் ராமாயண படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார். இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதா தேவியாக சாய் பல்லவியும், அனுமனாக சன்னி தியோலும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே இந்தப்படத்தில் பிரபல நடிகர் யாஷ் ராவணனாக நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மை அல்ல என்பது தெரியவந்திருக்கிறது.
நிதேஷ் திவாரியின் ராமாயணத்தில் யஷ் நடிக்கிறாரா?
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, யாஷ் நீண்ட காலமாகவே ராவணன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விருப்பப்பட வில்லையாம். அவருக்கு 80 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாம். இந்த நிலையில் அவர் இறுதியாக அந்தப்படத்தில் இணை தயாரிப்பாளராக இணைந்து இருக்கிறாராம்.
முன்னதாக, ராமாயணா படத்தில் நடித்த நடிகர்களின் ஆடைகள் மற்றும் கதாபாத்திரங்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் கசிந்த நிலையில், நிதேஷ் திவாரி அது குறித்து மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறாராம். இதனையடுத்து அவர் படப்பிடிப்பு தளத்தில் யாரும் போன் பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறையையும் விதித்து இருக்கிறாராம்.
ராமாயண நடிகர்கள் பற்றி
செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வெளியிட்டு இருக்கும் தகவலின் படி கும்பகர்ணன் கதாபாத்திரத்தில் பாபி தியோலை நடிக்க வைக்க படக்குழு அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. ராவணனின் தம்பி விபீஷணன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
ராமரின் மாற்றாந்தாய் கைகேயி கதாபாத்திரத்தில் லாராவும், மந்தாராவாக ஷீபாவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரன்பீர் தனது கதாபாத்திரத்திற்காக பயிற்சி பெற்று வருகிறார்
இந்த மாத தொடக்கத்தில் ரன்பீர் கபூர் அடுத்ததாக வரவிருக்கும் படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு இருந்தார்.
அது தொடர்பான வீடியோவில் பயிற்சியாளருடன் சட்டை இல்லாமல், பசுமையான சூழலுக்கு மத்தியில் உடற்பயிற்சி செய்வது, தனது பயிற்சியாளருடன் ஓடுவது, எடை தூக்குவது மற்றும் பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது போன்றவை இருந்தன.
கூடுதலாக, அவர் தனது பயிற்சி முறையின் ஒரு பகுதியாக நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைபயணம் ஆகியவற்றை மேற்கொள்வதும் அதில் இடம் பெற்று இருந்தது.
யாஷின் வரவிருக்கும் படம்:
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் 1, கேஜிஎஃப் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாராகியுள்ளார், நடிகர் யாஷ். இந்நிலையில் இவர் அடுத்து என்ன மாதிரியான படத்தில் நடிக்கப்போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்பட்டது.
இந்த நிலையில், யஷ் நடிக்கும் 19வது படத்தை மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அந்தப்படத்திற்கு டாக்சிக் என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகவும், திரைப்படம் ஏப்ரல் 2025 ம் ஆண்டு 10 தேதி திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, கீது மோகன்தாஸ் தமிழில் சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதே போல மாதவன் நடித்த ‘நள தமயந்தி’ படத்தில் நாயகியாக நடித்தார். மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த ‘மூத்தோன்’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
.
டாபிக்ஸ்