இந்தியாவிலே உச்சம்.. கே.ஜி.எஃப் எல்லாம் சும்மா.. வேற லெவல் ரெக்கார்டு செய்யும் யஷ்..
இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் வில்லன் நடிகராக மாறியுள்ளார் யஷ். இதன் மூலம் அவர் பழைய ரெக்கார்டுகள் அனைத்தையும் நொறுக்கி உள்ளார்.
பொதுவாக சினிமாவில் ஹீரோவின் நட்சத்திர அந்தஸ்தைப் பொறுத்து அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். ஆனால், சமீப காலமாக நட்சத்திர ஹீரோக்களின் சம்பளம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஒரு படத்திற்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் டாப் ஹீரோக்களும் இருக்கிறார்கள். பெரும்பாலான படங்களின் பட்ஜெட்டில் ஹீரோவின் சம்பளம் தான் பாதிக்கு மேலான சதவீதமாக உள்ளது.
துணை கதாபாத்திரத்தில் நட்சத்திர நடிகர்கள்
முன்னணி நடிகர்களை துணை வேடங்களிலோ அல்லது வில்லனாகவோ நடிக்க வைத்தால் அதற்கும் அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதனால் தற்போது வில்லன் வேடங்களுக்களில் நடிப்போர்க்கு யோகம் வந்துள்ளது. இதனால் பெரிய பட்ஜெட் படங்களில் சில ஹீரோக்களும் வில்லனாக நடிக்க முன்வருகின்றனர்.
சமீபத்தில் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ஒருவர் ரூ.200 கோடி சம்பளம் வாங்கினார். இதன் மூலம், இந்தியாவில் ஒரு படத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் வில்லன் என்ற வரலாற்றை உருவாக்கினார் என்ற செய்தி தான் அதிகம் பேரால் பேசப்படுகிறது.
அதிக சம்பளம் வாங்கிய வில்லன் யார்?
கன்னட நட்சத்திர ஹீரோ யஷ் கே.ஜி.எஃப் 1 மற்றும் கே.ஜி.எஃப் 2 போன்ற படங்களின் மூலம் பான்-இந்தியாவின் மாஸ் ஸ்டாராக உருவெடுத்துள்ளார். இந்தப் படங்களின் வெற்றியினால் அவரது சம்பளமும் அதிகளவு உயர்ந்துள்ளது.
தற்போது இவர் தான் இந்திய சினிமா வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் வில்லன் என்ற சாதனையையும் படைத்துள்ளார். நிதேஷ் திவாரி இயக்கும் ராமாயணம் என்ற படத்தில் வில்லனாக நடிக்க யஷ்-க்கு வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தில் இவருக்கு சம்பளமாக ரூ.200 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இப்படத்தில் ராவணன் வேடத்தில் யஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமர் வேடத்தில் நடிக்கிறார்.
கமலை வீழ்த்திய யஷ்
ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள யஷ் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் வில்லனாகி விட்டார். முன்னதாக கல்கி கி.பி 2898 படத்திற்காக கமல் ஹாசன் ரூ.40 கோடி வாங்கினார். இதன் மூலம் இவர் தான் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கிய வில்லன் நடிகராக இருந்தார். இதையடுத்து தற்போது அந்த இடத்தை பல மடங்கு வித்யாசத்தில் பிடித்துள்ளார் கமல் ஹாசன்.
பிரபாஸ், ஷாருக், சல்மானை விட அதிகம்
நட்சத்திர ஹீரோக்களை விட வில்லனாக நடிக்க யஷ் ரூ.200 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். பாலிவுட்டின் பாட்ஷாவாக இருக்கும் ஷாருக்கான் பல ஆண்டுகளாக ஒவ்வொரு படத்திற்கும் சுமார் 150 கோடி ரூபாய் எடுத்து வருகிறார். பான் இந்தியா ரெபெல் ஸ்டார் பிரபாஸ் தற்போது ஒரு படத்திற்கு ரூ .120 கோடி முதல் ரூ .150 கோடி வரை பெறுகிறார். சல்மான் கானும் சுமார் 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
ஆனால் ராமாயணம் படத்தின் சம்பளத்தின் மூலம் இவர்கள் அனைவரையும் மிஞ்சி வில்லன் கதாபாத்திரத்தில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக மாறியுள்ளார் யஷ். முன்னதாக ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவர் மட்டும் தான் 200 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தனர். பின் அதனை நடிகர் அல்லு அர்ஜூன் புஷ்பா படத்தில் 300 கோசி ரூபாய் சம்பளம் வாங்கி முறியடித்தார்.
ராமாயணம்
ராமாயணத்தில் ரன்பீர் ராமர் வேடத்திலும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர். இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. நிதேஷ் திவாரி இந்த திரைப்படத்தை உருவாக்குகிறார். நமித் மல்ஹோத்ரா மற்றும் யஷ் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.