Yaathisai Director: கொட்டடும் முரசு.. வருகிறது ராஜ படை.. யாத்திசை படக்குழுவின் அடுத்தப்படைப்பு - முழு விபரம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Yaathisai Director: கொட்டடும் முரசு.. வருகிறது ராஜ படை.. யாத்திசை படக்குழுவின் அடுத்தப்படைப்பு - முழு விபரம்

Yaathisai Director: கொட்டடும் முரசு.. வருகிறது ராஜ படை.. யாத்திசை படக்குழுவின் அடுத்தப்படைப்பு - முழு விபரம்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 21, 2025 07:42 PM IST

Yaathisai Director: 'யாத்திசை' இயக்குநர் தரணி ராசேந்திரனின் அடுத்த படம் குறித்தான அறிவிப்பு!

Yaathisai Director: கொட்டடும் முரசு.. வருகிறது ராஜ படை.. யாத்திசை படக்குழுவின் அடுத்தப்படைப்பு - முழு விபரம்
Yaathisai Director: கொட்டடும் முரசு.. வருகிறது ராஜ படை.. யாத்திசை படக்குழுவின் அடுத்தப்படைப்பு - முழு விபரம்

இந்தப் படத்திற்கான பூஜை எளிமையான முறையில் இன்று நடைபெற்றது. பூஜையில் சக்தி ஃபிலிம் பேக்டரியின் விநியோகஸ்தர் பி.சக்திவேலன், ஜி.தனஞ்செயன், சித்ரா லட்சுமணன், இயக்குநர் மணித்திர பி மூர்த்தி, ’அயலி’ வெப் சீரிஸ் புகழ் இயக்குநர் முத்து, தயாரிப்பாளர் கணேஷ் காமன் மேன், யூடியூபர்ஸ் மதன் கௌரி, மிஸ்டர் ஜி.கே. மற்றும் செர்ரி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

‘யாத்திசை’ படத்தில் நம்பிக்கையூட்டும் நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சேயோன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘விடுதலை’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஜே.கே ஃபிலிம் இன்டர்நேஷனல், ஜே.கமலக்கண்ணனின் முதல் தயாரிப்பாக இப்படம் அமைகிறது. அவர் கூறுகையில், “திரையுலகில் என்னுடைய சிறிய பங்கும் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. ’யாத்திசை’ படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தரணி ராசேந்திரனுடன் ஜேகே ஃபிலிம் இன்டர்நேஷனல் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறது.

எங்கள் தயாரிப்பு நிறுவனம் நல்ல படங்களைத் தரவும், திறமையான மற்றும் ஆர்வமுள்ள படைப்பாளிகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும். படத்தின் ஜானர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.' என்று பேசினார்.

யாத்திசை படம் எப்படி இருந்தது?

நாடே அஞ்சி நடுங்கக் கூடிய பாண்டிய மன்னன் ரணதீரனை கரு வறுத்து கோட்டையை கைப்பற்ற வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன் பயணப்படுகிறான் எயினர் குலத்தைச் சேர்ந்த கொதி.

அவனின் உறுதியை நம்பும் அவனது இனமும் ஒருக்கட்டத்தில் அவனுக்கு துணையாக நிற்க, தன் படையுடன் நேரடியாகவே மன்னனுடன் மோது கிறான் கொதி. இரு பக்கமும் உயிர் பலிகள் ஏற்பட, எயினர் எண்ணிக்கை கண்டு ஓட்டம் பிடிக்கிறான் பாண்டிய மன்னன்.

கோட்டை கொதியின் கைக்குச் சென்றுவிட, பெரும் பள்ளிகள் என்ற இனத்தை கொண்டதோடு, தன் படையுடன் கோட்டையை கைப்பற்ற பாண்டிய மன்னன் முனைகிறான். அவன் கைக்கு கோட்டை வந்து சேர்ந்ததா?.. எயினர்கள் எதிர்ப்பு கோட்டையை அவர்களுக்கு சாதகமாக்கியதா உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே படத்தின் கதையாக விவரிக்கப்பட்டு இருந்தது.

இயக்குநர் தரணி தான் நினைத்த உலகத்தை திரையில் யதார்த்தமாக கொண்டு வர தேர்ந்தெடுத்த இடங்கள் படத்தின் பெரும் பலமாய் அமைந்து இருந்தது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.