Dhanush: NEEK படத்தின் டிரெயிலர் ரிலீஸ் எப்போ? அப்டேட் கொடுத்த தனுஷ்.. குஷியான ரசிகர்கள்..
Dhanush: தனுஷ் இயக்கத்தில் திரைக்கு வரவுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு தேதியை வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Dhanush: தமிழ் திரையுலகில் நடிப்பு மட்டுமின்றி, பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என அடுத் டி.ஆராக இருக்கிறார் தனுஷ். இவர் பவர் பாண்டி, ராயன் திரைப்படத்திற்கு பின் தனது அக்கா மகன் மற்றும் இன்னும் சில இளம் நடிகர்களை வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வந்தார்.
NEEK ரிலீஸ்
முன்னதாக இந்தப்படம் அடுத்தமாதம் பிப்ரவரி 6ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கிடையே பொங்கலுக்கு வருவதாக சொன்ன விடாமுயற்சி திரைப்படம், பிப்ரவரி 6ம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தான் தனுஷ், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் டிரெயிலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். படம் ரிலீஸ் ஆக இன்னும் சில நாட்கள் தான் இருக்கும் நிலையில், படத்தின் டிரெயிலர் வரும் பிப்ரவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் இதுகுறித்த அறிவிப்பை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
NEEk இசை
தனுஷின் சகோதரி மகன் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியார், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தில் இருந்து முன்னதாக வெளியான ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்த பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது சிங்கிளான ‘காதல் ஃபெயில்’ தனுஷ் குரலில் வெளியானது. இதையடுத்து, ஏடி, புள்ள என அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
பாராட்டி தள்ளிய எஸ்.ஜே.சூர்யா
முன்னதாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை பார்த்த நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா அந்தப் படத்தை பாராட்டி எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
அந்தப்பதிவில், ‘உலக அளவில் கவனம் பெற்ற நடிகர் மற்றும் இயக்குநர் தனுஷ் இயக்கி இருக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.என்ன ஒரு அருமையான பொழுதுபோக்கு திரைப்படம், இக்கால தலைமுறைக்கான படமாக இந்தப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது; செம ஜாலியாக நகரும் இந்தப்படம் எமோஷனலாகவும், அதே நேரம், தனித்துவமாகவும் இருக்கிறது. ஆனால், தனுஷ் சார் எனக்கு ஒரு கேள்வி.. ?
நீங்கள் இருக்கும் பிசியான வேலைகளுக்கிடையே எப்படி இப்படி ஒரு தென்றல் போன்ற படத்தை எடுத்தீர்கள்; அதுவும் ராயன் படத்தை இயக்கிய உடனே... என்ன ஒரு டைரக்ஷன்.. படத்தில் மிகச்சரியான, கவனம் ஈர்க்கும் இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நடிகர், நடிகைகளுக்கு என்னுடைய வாழ்த்துகள்.’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இட்லி கடை
இதற்கிடையே தான் இயக்கும் இட்லிகடை படத்தின் போஸ்டரையும் அண்மையில் தனுஷ் வெளியிட்டார். இந்தப் படத்தில் அவருடன் ராஜ்கிரண், நித்யாமேனன், அருண் விஜய், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்