இளம் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு அன்பு பரிசளித்த சிவகார்த்திகேயன்.. கேக் வெட்டி பாராட்டு
இளம் உலக செஸ் சாம்பியன் குகேஷை தனது அலுவலத்தில் வைத்து சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் அவருடன் கேக் வெட்டி பாராட்டுகளை தெரிவித்து, பரிசும் அளித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்
உலக இளம் செஸ் சாம்பியனான குகேஷ், நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது குகேஷுடன் அவரது குடும்பத்தினர், வேலம்மாள் கல்வி நிறுவனம் தாளாளர் வேல் மோகன், துணை தாளாளர் ஸ்ரீராம் ஆகியோரும் உடன் இருந்தனர்.
குகேஷுக்கு காஸ்ட்லி பரிசு
உலகின் இளம் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார் நடிகர் சிவகார்த்திகேயன். அத்துடன் அவருக்கு காஸ்ட்லி வாட்ச் ஒன்றையும் பரிசாக அளித்தார். தொடர்ந்து குகேஷின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை அவருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.
குகேஷின் குறிப்பிடத்தக்க சாதனை கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக இருக்கும் எனவும் சிவகார்த்திகேயன் வாழ்த்தியுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த செயல் தேசத்தை பெருமைபடுத்தும் சாதனைகளை அங்கீகரிப்பதாக இருப்பதாக அவரது ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
இளம் செஸ் சாம்பியன் குகேஷ்
சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி, தமிழ்நாட்டை குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 18 வயதான குகேஷ் உலகின் இளவயது செஸ் சாம்பியன் என்ற தனித்துவ சாதனையை படைத்தார். சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு ரூ.11 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு குகேஷுக்கு பாராட்டு விழாவும், பரிசும் வழங்கப்பட்டது. அத்துடன் உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அமரன் தந்த வெற்றி குஷியில் சிவகார்த்திகேயன்
மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான அமரன் படத்தில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். தீபாவளி ரிலீசாக வெளியான இந்த படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானதுடன், பாக்ஸ் ஆபிஸிலும் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இந்த படம் தந்த மாபெரும் வெற்றியால குஷியில் இருந்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு அவர் நடிக்க இருக்கும் 25வது படத்தை சுதா கொங்காரா இயக்குகிறார்.
முன்னதாக அமரன் திரைப்படம் பெற்ற வெற்றிக்கும், எதிரிகள் தொல்லை குறைந்துள்ளதற்கு மதுரையை அடுத்த அழகர்கோயில் கள்ளழகர் திருக்கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்புவுக்கு அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்தினார் நடிகர் சிவகார்த்திகேயன். அப்போது அவரது மனைவி ஆர்த்தி, மகள் மற்றும் மகனுடன் இணைந்து வழிபாடு நடத்தினர்.
ஹாட் டாப்பிக்காக மாறிய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸாக வந்து வாழ்த்து தெரிவிக்க விரும்பினார். இதற்காக அவர், ராணுவ அதிகாரி உடையில் வந்து ஆச்சரியப்படுத்தினார்.
இந்த விடியோவை சிவகார்த்திகேயன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதைப் பார்த்த பலரும் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவியின் அன்பை பார்த்து ரசித்தனர்.
வீட்டில் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த மனைவி ஆர்த்தியின் பின்னாடி, அமரன் பட கெட்டப்பில் சென்று அமைதியாக நின்றுள்ளார் சிவகார்த்திகேயன். தனக்கு பின்னால் யாரோ இருப்பதை உணர்ந்து திரும்பி பார்த்த அவரது மனைவி ஆர்த்தி சட்டென ஷாக்காகி, அது தன் கணவர்தான் என உணர்ந்த பிறகு க்யூட் சிரிப்புடன் ரெமான்ஸை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விடியோ தற்போது இணையத்தில் வைராகி லைக்குகளை குவித்து வருகிறது.
டாபிக்ஸ்