மீண்டும் ஒரு பெண் போட்டியாளருக்கு டாட்டா காட்டப் போகும் பிக்பாஸ்! எலிமினேஷன் ட்விஸ்ட் ரெடி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மீண்டும் ஒரு பெண் போட்டியாளருக்கு டாட்டா காட்டப் போகும் பிக்பாஸ்! எலிமினேஷன் ட்விஸ்ட் ரெடி

மீண்டும் ஒரு பெண் போட்டியாளருக்கு டாட்டா காட்டப் போகும் பிக்பாஸ்! எலிமினேஷன் ட்விஸ்ட் ரெடி

Malavica Natarajan HT Tamil
Nov 02, 2024 11:54 AM IST

பிக்பாஸ் வீட்டின் 4வது வாரத்தில் பெண் போட்டியாளர் ஒருவர் தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகிறார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மீண்டும் ஒரு பெண் போட்டியாளருக்கு டாட்டா காட்டப் போகும் பிக்பாஸ்! எலிமினேஷன் ட்விஸ்ட் ரெடி
மீண்டும் ஒரு பெண் போட்டியாளருக்கு டாட்டா காட்டப் போகும் பிக்பாஸ்! எலிமினேஷன் ட்விஸ்ட் ரெடி

24 மணி நேரத்திற்குள் எலிமினேஷன்

இந்நிலையில், போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 24 மணி நேரத்திற்குள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சாச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின் 3 நாட்கள் மக்களுடன் மக்களாக இந்த விளையாட்டை பார்த்து வந்த சாச்சனா மீண்டும் அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

2 ஆண் போட்டியாளர்கள் வெளியேற்றம்

இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களால் ஃபேட் மேன் ரவீந்தர் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார். இந்நிலையில், ஒரு வாரமாக அவர் செய்த சேட்டைகளின் காரணமாகவும், அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டின் 2வது வாரத்தில், அர்னவ் பெண்கள் அணியினரால் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். பின், அவர் தனது எலிமினேஷனுக்கு ஆண்கள் அணியினர் தான் காரணம். அவர்கள் ஜால்ரா அடித்து, ஒருவர் முதுகிற்கு பின் மற்றொரவர் ஒழிந்து கொள்கின்றனர் என மிகக் கடுமையாக விமர்சித்திருப்பார்.

3ம் வாரத்தில் பெண் போட்டியாளர் வெளியேற்றம்

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டின் 3வது வாரத்தில், பெண்கள் அணியைச் சேர்ந்த தர்ஷா குப்தா வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷா விஜே விஷாலுக்கு சில அறிவுரைகளை வழங்கிச் சென்றார்.

வது வார நாமினேஷன் ஃபிரி பாஸ்

4வது வார தொடக்கத்தில் நடந்த நாமினேஷன் பாஸ் டாஸ்கில் பெண்கள் அணி வெற்றி பெற்று பாஸை கைப்பற்றியது. இதையடுத்து, நேற்று பெண்கள் அணி பிக்பாஸ் வீட்டில் யாரை காப்பாற்ற வேண்டும் என முடிவெடுக்குமாறு பிக்பாஸ் அறிவித்தது. இதையடுத்து பெண்கள் அணி, குழுவாக சேர்ந்து சுனிதாவை நாமினேஷன் ப்ரி பாஸை வத்து காப்பாற்றினர். இதையடுத்து, பெண்கள் வீட்டிலுள்ள அன்ஷிதா, ஜாக்குலின், பவித்ரா ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர்.

4வது வார எலிமினேஷன்

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து 4வது வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்தத் தகவலின் படி, அன்ஷிதா அல்லது பவித்ரா ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் வெளியாக வாய்ப்புள்ளது என்றும், அதில் பவித்ராவிற்கு மக்கள் வாக்கு அதிகம் கிடைத்ததால், அவர் வெளியேற வாய்ப்புகள் குறைவு எனக் கூறுகின்றனர். அதனால், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து அன்ஷிதா வெளியேற அதிகம் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.