Actor Soori: காமெடியனா நடிப்பீங்களா?.. ‘இனி நம்ம ரூட்டே வேற’ ..சில்லறையை சிதறவிட்ட சூரி - பேட்டி உள்ளே!
Actor Soori: தொடர்ந்து அவரிடம் இனி வரும் காலங்களில் காமெடியனாக நடிப்பீர்களா என்று கேட்ட போது, நிச்சயமாக நான் கதையின் நாயகனாக பயணிப்பேன் என்று கூறினார். - பேட்டி உள்ளே!

விடுதலை படத்தின் மூலமாக கதையின் நாயகனாக அறிமுகமான சூரியின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் கருடன். இந்தப்படம் தொடர்பாக நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்தார்.
ரூட்டே வேற
அவர் பேசும் போது, “ நான் இப்போது வேறொரு பாதையில் பயணிக்கிறேன். அதற்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதில் நம்பிக்கையாக நான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். இந்த பாதையில் என்னை அறிமுகம் செய்த வெற்றிமாறனுக்கும், தற்போது என்னை வைத்து கருடன் படத்தை இயக்கி இருக்கும் துரை செந்தில் குமாருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார்.
தொடர்ந்து அவரிடம் இனி வரும் காலங்களில் காமெடியனாக நடிப்பீர்களா என்று கேட்ட போது, நிச்சயமாக நான் கதையின் நாயகனாக பயணிப்பேன் என்று கூறினார். மேலும் பேசிய அவர் என்னுடைய இந்த பாதைக்கு இடையூறு இல்லாமல் காமெடி ரோல்கள் வந்தால் அதிலும் நிச்சயமாக நடிப்பேன்” என்றார். அன்று சசிகுமார் திரைப்படத்தில் நீங்கள் நடித்தீர்கள் தற்போது என்னுடைய படத்தில் அவர் நடித்திருக்கிறார் என்று கூறுகிறீர்கள் அப்போது அவருடைய படத்தில் நான் நடித்தேன். இப்போதும் நான்தான் அவருடன் நடிப்பது போன்று இருக்கிறது. என்றைக்கு இருந்தாலும் சசிகுமார் எனக்கு அண்ணன்தான்” என்று பேசினார்.
கருடன் திரைப்படத்திற்கு அனுமதி மறுப்பு
நடிகர்கள் சசிக்குமார், உன்னி முகுந்தன், மைம் கோபி, ஆர்.வி. உதயக்குமார் என பெரிய நடிகர் பட்டாளே கதாபாத்திரங்களாக களம் இறங்கி இருக்கும் திரைப்படம் கருடன். விடுதலை படத்தில் ஹீரோவாக அறிமுகமான நகைச்சுவை நடிகர் சூரி, கருடன் திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்படம் நேற்று ( மே 31) திரையரங்குகளில் வெளியானது.
இதற்கிடையில், கடலூரில் உள்ள திரையரங்கு ஒன்றில் கருடன் படத்தை பார்க்க வந்த 20க்கும் மேற்பட்ட நரிகுறவர்களுக்கு திரையரங்க நிர்வாகம் டிக்கெட் தர மறுத்ததாகவும், திரையரங்கிற்குள் செல்ல அவர்களை அனுமதிக்க வில்லை என்றும் புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ வைரல் ஆன நிலையில், இது குறித்து நரிக்குறவ மக்கள் வட்டாட்சியரிடம் முறையிட்டதாக தெரிகிறது.இந்த நிலையில், வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்ததின் பேரில், நரிக்குறவர்கள் கருடன் டிக்கெட்டுகளை பெற்று தியேட்டருக்குள் சென்றனர். முன்னதாக சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கருடன் குழு
நெடுஞ்சாலை படப்புகழ் ஷிவிதா நாயர், விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த ரோஷிணி ஹரிப்பிரியன், பிரகிடா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்து உள்ளார்கள்.படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், ரேவதி சர்மா, ஷிவதா நாயர், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து உள்ளனர். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.
கருடன் கதை என்ன?
கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை தனக்கு சாதகமாக மாற்ற துடிக்கிறார் ஒரு அரசியல்வாதி. ஆனால், அந்த இடத்தின் மூலபத்திரம் கோயில் டிரஸ்டி வசம் இருக்கிறது. அந்த பத்திரத்தை கைப்பற்றி, இடத்தை எப்படியாவது தன்வசமாக்க வேண்டும் என திட்டமிடுகிறார் அரசியல்வாதியாக நடிக்கும் ஆர். வி. உதயக்குமார். அதே ஊரில் இரு நண்பர்கள் இணைபிரியா நட்புடன் இருக்கிறார்கள்.
அந்த இரு நண்பர்களில் ஒருவர் சசிக்குமார், மற்றொருவர் உன்னி முகுந்தன். உன்னியின் நிழலாக, அவருக்கு விஸ்வாசமாக இருப்பவர் தான் சொக்கன். அந்த சொக்கன் தான் சூரி. பத்திரத்தை கைப்பற்ற அரசியல்வாதியாக ஆர். வி. உதயக்குமார் என்னென்ன செய்கிறார். என்ன மாதிரி திட்டமிடுகிறார், அதற்காக என்ன மாதிரியாக சம்பவங்கள் நடக்கிறது என்பது தான் படத்தின் முழு கதை.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்