MS Subbulakshmi: நயன்தாரா (அ) த்ரிஷா..உருவாகிறது MS சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு! - களமிறங்கிய பிரபல இயக்குநர்!
MS Subbulakshmi:திரையில் MS சுப்புலட்சுமி அம்மாவாக நடிப்பது யார் என்பது தொடர்பான முடிவு எடுக்கப்பட இருக்கிறது.இந்தத்திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இந்தப்படத்தில் நயன்தாரா அல்லது த்ரிஷா நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.
MS Subbulakshmi: இந்தியாவில் முதன்முறையாக, ஒரு இசைக்கலைஞராக, பாரதரத்னா விருது பெற்று பெருமை சேர்த்தவர் மதுரைச்சேர்ந்த சண்முகவடிவு சுப்பு லட்சுமி. இவரை திரைத்துறையில் அனைவரும் எம்.எஸ். சுப்புலட்சுமி என்று அழைப்பர். இவரது வாழ்க்கை கதை திரைப்படமாக உருவாக இருக்கிறதாம். இந்தப்படம் வருகிற 2025ம் ஆண்டு திரைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.
பெங்களூர் தயாரிப்பு நிறுவனம்:
பெங்களூரைச்சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றும், கர்நாடகாவைச் சேர்ந்த முன்னணி இயக்குநர் குழுவும் படத்திற்கு முந்தைய பணிகளை தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது தொடர்பாக டிடி நெக்ஸ்ட் இணையதளம் வெளியிட்டு இருக்கும் செய்தியில் , “ படத்தின் ஸ்கிரிப்ட் தொடர்பான வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கின்றன.
திரையில் எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவாக நடிப்பது யார் என்பது தொடர்பான முடிவு எடுக்கப்பட இருக்கிறது.இந்தத்திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை நயன் தாரா அல்லது த்ரிஷாவை நடிக்க வைக்க படக்குழு ஆர்வமாக இருக்கிறது. இந்த லிஸ்டில் ராஷ்மிகா மந்தனாவின் பெயரும் அடிபட்டு இருக்கிறது ” என்று குறிப்பிட்டு இருக்கிறது.
முன்னதாக, மதுரையில் பிறந்து பின்னர் இசை உலகில் தனக்கென தனியொரு அடையாளத்தை பெற்று உலகப் புகழ் பெற்றவர் மறைந்த கர்நாடக இசை கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமி. இசை குடும்பத்தில் பிறந்த சுப்பலட்சுமி, சிறு வயதிலேயே கர்நாடக இசையை முறையாக கற்று தேர்ந்தார். தனது 11 வயதில் முதல் முறையாக மேடை கச்சேரியில் பாடினார். கர்நாடக இசையில் மட்டுமில்லாமல், இந்துஸ்தானி கிளாசிக் இசையையும் முறையாக பயின்றார்.
சினிமாவிலும் நடிகையாக..:
கர்நாடக இசை கலைஞராக இருந்த இவர் சென்னைக்கு குடிபெயர்ந்து சினிமாவிலும் நடிகையாக அறிமுகமானார். 1938-ல் வெளியான ‘சேவசாதனம்’ என்ற படத்தில் அறிமுகமான சுப்புலட்சுமி, கடைசியாக 1947இல் வெளியான 1000 தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி படத்தில் நடித்தார். இசை உலகில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய சுப்பலட்சுமி பத்மபூஷண், பதமவிபூஷண், சங்கீத கலாநிதி என பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இசைத்துறையில் பாரத ரத்னா விருது வென்ற முதல் இசைக்கலைஞர் என்ற பெருமைக்குரியவராக எம்.எஸ். சுப்புலட்சுமி உள்ளார். இவர் கடந்த 2004ம் ஆண்டு தன்னுடைய 88 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
இளையராஜா பயோபிக்:
முன்னதாக, இந்தியா சினிமா இசையின் அடையாளமாக பார்க்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கை படம் உருவாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது. ‘இளையராஜா’ என்றே பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார்.
இந்தப்படத்தை ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’, ‘கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார். இந்தப்படம் தொடர்பான துவக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், வெற்றிமாறன், இளையராஜா, தனுஷ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்