தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kalaignar100: ‘பத்திரிகையில் முளைத்த பஞ்சாயத்து’.. கலைஞர் 100 நிகழ்ச்சிக்கு விஜய் அஜித் வராதது ஏன்? - காரணம் இங்கே!

Kalaignar100: ‘பத்திரிகையில் முளைத்த பஞ்சாயத்து’.. கலைஞர் 100 நிகழ்ச்சிக்கு விஜய் அஜித் வராதது ஏன்? - காரணம் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 07, 2024 06:10 PM IST

அப்படி இருக்கும் பொழுது அவர்கள் ஏன் வரவில்லை என்று தேடிய போது, விழா அழைப்பிதழில் ரஜினி கமலுக்கு கொடுத்த மரியாதை, விஜய் அஜித்திற்கு கொடுக்கவில்லை என்பது தகவலாக வந்து நிற்கிறது.

ஏன் வரவில்லை?
ஏன் வரவில்லை?

ட்ரெண்டிங் செய்திகள்

இது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. அதற்கான காரணத்தை பிரபல விமர்சகரான வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.  

அவர் பேசும் போது, “கலைஞர் 100 நிகழ்ச்சியில், அஜித் விஜய் வருவார்கள் என்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்தார்கள். ஆனால் அவர்கள் இருவரும் நிகழ்ச்சிக்கு வரவில்லை. 

இந்த நிகழ்ச்சியை குழு ஏற்பாடு செய்த போது, அஜித் அஜர் பைஜான் நாட்டிலும், விஜயின் கோட் படம் தொடர்பாக பல்வேறு வெளிநாடுகளிலும் நடப்பதாக இருந்தது. 

ஆனால் அதிஷ்டவசமாக இரண்டு பேரும் நேற்று சென்னையில்தான் இருந்தார்கள். நடிகர் அஜித் நேற்று முன்தினமே துபாயில் இருந்து சென்னைக்கு வந்து விட்டார். விஜயும் சென்னையில் தான் இருந்தார். 

அப்படி இருக்கும் பொழுது அவர்கள் ஏன் வரவில்லை என்று தேடிய போது, விழா அழைப்பிதழில் ரஜினி கமலுக்கு கொடுத்த மரியாதை விஜய் அஜித்திற்கு கொடுக்கவில்லை என்பது தகவலாக வந்து நிற்கிறது. 

இந்த கோபம் ரசிகர்களுக்கும் இருந்தது. இது விவாத பொருளாகவும் மாறியது. உண்மையில் ரஜினி கமலுக்கு கொடுத்த மரியாதையை, விஜய் அஜித்திற்கு கொடுத்திருந்தால் ஒரு வேளை அவர்கள் வந்திருப்பார்களோ என்ற எண்ணம் வருகிறது. காரணம் என்னவென்றால், இவர்கள் இருவருக்கும், கலைஞருக்கும் இடையே முரண்பாடுகள் இருந்தாலும், தீரா பகை ஒன்றும் கிடையாது” என்று பேசினார்

 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்