தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Mohini: ‘பிராமண பையன்; பந்தா இல்லை;பார்த்த முதல் நாளே காதல்; அடுத்த நாள் கல்யாண ஏற்பாடு’ - மோகினி காதல் கதை!

Actress Mohini: ‘பிராமண பையன்; பந்தா இல்லை;பார்த்த முதல் நாளே காதல்; அடுத்த நாள் கல்யாண ஏற்பாடு’ - மோகினி காதல் கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 23, 2024 06:42 AM IST

நான் அடுத்த நாளே வீட்டில் சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது. காரணம், நானும் அவரும் பழகிக்கொண்டு, காதலிக்கும் போது, எங்கேயாவது செல்வோம்

நடிகை மோகினியின் காதல் கதை!
நடிகை மோகினியின் காதல் கதை!

ட்ரெண்டிங் செய்திகள்

90 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத்தும் ஒரு கொலுவில் தான் சந்தித்துக் கொண்டோம். அவரிடம் பெரிதாக பந்தா இல்லை. மிகவும் பணிவாக நடந்து கொண்டார். 

எம்பிஏ முடித்து அமெரிக்கன் எக்ஸ்பிரஸில் வேறு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு அவரை பார்த்தவுடன் மிகவும் பிடித்திருந்தது. அப்போது எனக்கு 21 வயது ஆகியிருந்தது. நான் அடுத்த நாளே, அவரைப்பற்றி வீட்டில் சொன்னேன். 

நான் அடுத்த நாளே வீட்டில் சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது. காரணம், நானும் அவரும் பழகிக்கொண்டு, காதலிக்கும் போது, எங்கேயாவது செல்வோம். 

அப்போழுது அதைப்பற்றி தேவையில்லாத கிசுகிசுக்கள் வெளியாகும். பத்திரிகைகளில் எழுதுவார்கள். அதுவெல்லாம் தேவையே இல்லை என்று சொல்லித்தான் நான் வீட்டில் சொல்லி விட்டேன். 

வீட்டில் பரத்தை பற்றி நான் சொல்லும் பொழுது, அவர் பிராமண பையன், நல்ல குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார், நன்றாக படித்திருக்கிறார், நல்ல வேலையிலும் இருக்கிறார். எனக்குப் பிடித்திருக்கிறது. 

உங்களுக்கு விருப்பம் இருந்தால், எனக்கு அவரை கல்யாணம் செய்து வையுங்கள் என்றேன். கேட்ட என்னுடைய அம்மாவிற்கும், அப்பாவிற்கும் ஒரே ஆச்சரியமாக இருந்தது. என்ன வந்தாள், இவ்ளோ பெரிய விஷயத்தை மிகவும் சாதாரணமாக சொல்லிவிட்டு செல்கிறாள் என்று, அவர்கள் கொஞ்சம் அதிர்ந்து போய் தான் இருந்தார்கள்.

இதனையடுத்து அவர் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னுடைய அப்பா, அம்மாவை சந்தித்தார். என்னை விட மிகவும் சீக்கிரமாக, அவரை என்னுடைய பெற்றோருக்கு பிடித்து விட்டது. 

இதையடுத்து அவர் வீட்டில் என்னைப் பற்றி சொன்னார். ஜாதகம் பார்த்தார்கள்.என்னையும் பார்த்தார்கள் ஜாதகம் பொருத்தம் இருந்தது. என்னையும் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னதான் அவரை எனக்கு பிடித்திருந்தாலும் காதல், டேட்டிங் என்பதிலெல்லாம் எனக்கு கொஞ்சம் பயம் உண்டு. 

அம்மாவிடம் சண்டை போட்டு, அவரை நான் இழுத்துச் சென்று ஓடும் அளவுக்கு, எனக்கு தைரியமும் கிடையாது. அதனால் அப்பா, அம்மா ஒத்துக் கொண்டால் திருமணம் செய்யலாம், இல்லையென்றால் விட்டுவிடலாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அப்பா, அம்மா ஒத்துக்கொண்டார்கள். நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்