Robo Shankar Daughter: சொந்த மாமா இல்லையா.. ரோபோ சங்கர் மகள் திருமணம் செய்து இருக்கும் கார்த்திக் யார்?
Robo Shankar Daughter: கார்த்திக், பிரியங்காவின் சொந்த தம்பி என சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என முதல் முறையாக கார்த்திக் பிரபல யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
நடிகர் ரோபோ சங்கருக்கு, பிரியங்கா என்ற மனைவி உள்ளார். தம்பதியருக்கு இந்திரஜா என்ற மகள் உள்ளார். இவரும் அவரது தந்தையைப் போலவே சினிமாவில் கலக்கி வருகிறார்.
நடிகர் விஜய்யின், பிகில் படத்தில் பாண்டியா என்கிற பாண்டியம்மா என்ற சிங்கம் கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை இந்திரஜா நடித்தார். அடுத்து அவர் நடிகர் சூரிக்கு ஜோடியாக உட்டா இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான விருமன் படத்தில் நடித்தார்.
நடிகை இந்திரஜாவுக்கும் அவரது தாய் மாமா கார்த்திக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சியதார்தம் நடந்து முடிந்த நிலையில் சமீபத்தில் திருமணம் முடிந்தது. இந்திரஜா - கார்த்திக் தம்பதியினரின் திருமணம் மதுரையில் நடைபெற்றது. தாலி கட்டி ஆனந்த கண்ணீர் வடித்த இந்திரஜாவை குடும்பத்தினர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் சூரி உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்திரஜாவின் கணவர் கார்த்திக், கார்வோ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரின் திருமணம் ஆடுரையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பலரும் கார்த்திக், இந்திரஜாவின் சொந்த தாய் மாமா என சொல்கிறார். அதாவது, கார்த்திக், பிரியங்காவின் சொந்த தம்பி என சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என முதல் முறையாக கார்த்திக் பிரபல யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
அவர் பேசுகையில், “ நான் பிரியங்கா அக்காவின் சொந்த தம்பி கிடையாது. எங்கள் டிரஸ்ட்டில் பிரியங்கா அக்கா, ரோபோ சங்கர் மாமா உறுப்பினர்கள். பிரியங்கா அக்கா தான் என்னை தம்பியாக தத்தெடுத்து கொண்டார். பலரும் நாங்கள் உண்மையான அக்கா, தம்பி என நினைத்து கொண்டார்கள்.
திருமண பத்திரிக்கை எடுத்து கொண்டு என் அம்மா பலருக்கும் வைக்க சென்ற போது அனைவரும் ஒரே விஷயம் தான் கேட்டார்கள். உங்கள் மகனுக்கு திருமணமா, அவர் பிரியங்காவின் தம்பி தானே என கேட்டார்கள். அந்த அளவிற்கு அனைவரும் அக்கா, தம்பி என நினைத்து கொண்டார்கள் “ என்றார்.
' பிகில் ' மற்றும் ' விருமன் ' போன்ற அடுத்தடுத்த திட்டங்களுடன், இந்திரஜா சங்கர் தனது திரையில் இருப்பு மற்றும் நடிப்புத் திறமையால் பார்வையாளர்களை தொடர்ந்து வசீகரித்து, தொழில் துறையில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக தனது நிலையை உறுதிப்படுத்துகிறார்.
இந்திரஜா சங்கரும், கார்த்திக்கும் தங்கள் வாழ்க்கையின் இந்தப் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் போது, அவர்கள் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்தவர்களிடமிருந்து அன்பையும், நல்வாழ்த்துக்களையும் வெளிப்படுத்தி இகிறார்கள்.
நன்றி: Behindwoods
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்