18 வயதில் பலே சாதனை... மார்தட்டும் இந்தியா..போராடி வென்ற தமிழன்.. யார் இவர்?
செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 14-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று இருக்கிறார் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ்.
செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 14-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று இருக்கிறார் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ்.
இதன்மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். செஸ் போட்டி வரலாற்றில் மிகப்பெரிய இந்த சாதனையை படைத்து இருக்கும் குகேஷ் தொம்மராஜா யார் என்று பார்க்கலாம்.
2006 ஆம் ஆண்டு மே 29 அன்று பிறந்தவர் குகேஷ். அப்பா டாக்டர் ரஜினிகாந்த் காது, மூக்கு, தொண்டை மருத்துவர். அம்மா பத்மா ஒரு நுண்ணுயிரியலாளர். தன்னுடைய ஏழாவது வயதில் செஸ் பயணத்தை தொடங்கிய குகேஷ், வாரத்திற்கு மூன்று முறை தன்னுடைய பயிற்சியாளரின் கீழ் பயிற்சி பெற்றார்.
ஆடும் திறமை
அவரது ஆடும் திறமை மற்றவர்களிடம் இருந்து தனித்து நிற்க, அவருக்கு இயல்பாகவே செஸ் போட்டியில் திறமை இருப்பது தெரிய வந்தது. 2015 ஆம் ஆண்டு, ஏசியன் ஸ்கூல் செஸ் சாம்பியன் போட்டியில் 9 வயதுக்கு உட்பட்ட பிரிவில் களமிறங்கிய குகேஷ், அந்த போட்டியில் பட்டம் வென்றார்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இளைஞருக்கான செஸ் போட்டியில் பட்டம் வென்ற குகேஷ், அடுத்ததாக ஏசியன் யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 5 தங்க பதக்கங்களை வென்று அசத்தினார்.
உலக செஸ் போட்டியில்
அதே வருடம் இளைஞருக்கான உலக செஸ் போட்டியில் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இறங்கிய குகேஷ், அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றார்.
34 வது Cappelle-la-Grande ஓபன் போட்டியில் பட்டம் வென்ற குகேஷ் அதன் மூலமாக கிராண்ட் மாஸ்டர் ஆனார். இதன் மூலம், மிகவும் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆன 2 வது வீரர் என்ற பெருமை அவரை சேர்ந்தது. கடந்த ஆண்டு பிரபல செஸ் வீரர் ஆனந்த் விஸ்வநாதனின் 37 ஆண்டு கால சாதனையை முறியடித்து டாப் செஸ் வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.
டாபிக்ஸ்