Tamil Actress: கோடிகளில் சம்பளம்..தென்னிந்திய நடிகைகளில் அதிக சொத்து வைத்து இருக்கும் டாப் ஐந்து பேர் யார்?
Indian actresses: டாப் ஹீரோயின்களின் சொத்து மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது. இப்போது கோடிகளை குவித்த டாப் தென்னிந்திய நடிகைகள் பற்றி பார்ப்போம்.

இந்த காலத்தில் நடிகைகள் கோடிகளை வசூல் செய்கிறார்கள். குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்களுக்கு போட்டியாக நம் தென்னக ஹீரோயின்கள் கோடீஸ்வரர்களாகி விடுகிறார்கள். கோடிகளை குவித்து 2024 வரை பிசினஸ் செய்ய இருக்கும் தென்னிந்திய ஹீரோயின்கள் யார் என்று இப்போது பார்ப்போம்.
திரையுலகில் ஹீரோக்கள் நீடித்து இருப்பது போல் ஹீரோயின்கள் இருக்க மாட்டார்கள். திருமணம், வயது, அழகு என பல காரணங்களால் நடிகைகள் களத்தை விட்டு வெளியேறுகிறார்கள் அல்லது குணச்சித்திர வேடங்களில் நடிக்கின்றனர்.
அக்கா, அம்மா என துணை வேடங்களில் நடிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் சில நடிகைகள் தொடர்ந்து கதாநாயகிகளாகவே இருக்கிறார்கள். உதாரணம் த்ரிஷா, நயன்தாரா போன்ற நடிகைகள். துணை கேரக்டர்கள் மட்டுமின்றி 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். சமீபகாலமாக ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் பெரும் சம்பளம் வாங்குகிறார்கள். இதனால் இந்த டாப் ஹீரோயின்களின் சொத்து மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது. இப்போது கோடிகளை குவித்த டாப் தென்னிந்திய நடிகைகள் பற்றி பார்ப்போம்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா
தென்னிந்தியாவின் பணக்கார நடிகை நயன்தாரா. நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 300 கோடி ரூபாய். நயன்தாரா ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.
நடிகை அனுஷ்கா
தென்னிந்திய டாப் 10 பணக்கார நடிகைகள் பட்டியலில் நடிகை அனுஷ்கா 2வது இடம் பிடித்துள்ளார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமான அனுஷ்காவின் சொத்து மதிப்பு ரூ.133 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி போன்ற பான் இந்தியா படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு. சமீபத்தில் மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பாலிஷெட்டி படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார்.
நடிகை தமன்னா
தென்னிந்திய பணக்கார நடிகைகள் பட்டியலில் நடிகை தமன்னா 3 ஆவது இடம் பிடித்துள்ளார். தமன்னா ஒரு படத்திற்கு ரூ. 1.5 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமன்னா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை சமந்தா
நடிகை சமந்தா தென்னிந்தியாவின் பணக்கார நடிகைகளில் ஒருவர். சமந்தா ஒவ்வொரு படத்துக்கும் 8 கோடி ரூபாய் வரை வாங்குகிறார்.
நடிகை த்ரிஷா
20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து வரும் த்ரிஷா, சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் கதாநாயகியாக நுழைந்தார். இறுதியாக விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்துவிட்டு மீண்டும் பிஸியாகிவிட்டார் .
தற்போது அஜித்தின் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். த்ரிஷா மணிரத்னம்-கமல்ஹாசன் டாக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார். த்ரிஷாவும் 6 முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். இவரது சொத்து மதிப்பு 90 கோடி ரூபாய்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்