சர்வதேச அரங்கை அதிர வைத்த ராமின் ஏழு கடல் ஏழு மலை? ரீலிஸ் எப்போது தெரியுமா? உலாவும் அப்டேட்!
ராமின் ஏழு கடல் ஏழு மலை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பல நாட்கள் ஆகியும் இப்படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

படம் என்றாலே துப்பாக்கி, சண்டை என வன்முறைகளை மொத்தமாக கலந்து கட்டி வாரி இறைக்கும் தற்போதைய தமிழ் சினிமா இயக்குனர்களின் நடுவே தமிழ் சினிமாவில் உயிரோட்டமுள்ள படங்களை தருவதில் ஒரு சில இயக்குநர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். அதில் ஒருவர் தான் இயக்குனர் ராம், ‘கற்றது தமிழ்’, ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ போன்ற சிறந்த படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கியது வெறும் நான்கு படங்கள் தான் ஆனால் ரசிகர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் காட்சிகளையும், வசனங்களையும் கொடுத்து விட்டார். இன்றளவும் நமது மனதில் இவரின் ஆனந்தி, பிரபாகரன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் பேரன்பு, இப்படத்தில் மம்மூட்டி, அஞ்சலி ஆகியோர் நடித்து இருந்தனர். மாற்றுத்திறனாளி மகளின் பாலியல் ஆசைகளை புரிந்து கொண்டு அவளுக்காக வாழும் தந்தையாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இயக்குனர் ராம் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் அஞ்சலி, சூரி ஆகியோரை வைத்து ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வெளியான தகவல்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பல நாட்கள் ஆகியும் இப்படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இயக்குனர் ராம் மற்றும் யுவன் இணைந்தாலே ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி. மேலும் இத்திரைப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாநாடு படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து உள்ளார்.