Janhvi Kapoor: தங்க நகை.. காஞ்சிவரம் சேலை..மல்லிப்பூ… வாழைஇலை சாப்பாடு!- கல்யாணம் இப்படிதான் நடக்கணும் - ஜான்வி பேட்டி!
ஜான்வி கபூர் தன்னுடைய கல்யாணம் எப்படி நடக்க வேண்டும் என்பது குறித்தான பார்வையை பகிர்ந்து இருக்கிறார்.
ஜான்வி கபூர் தன்னுடைய எப்படி நடக்க வேண்டும் என்பது குறித்தான பார்வையை பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “எனக்கு ஆரம்பத்தில் இருந்தே அது குறித்தா தெளிவான படம் இருக்கிறது. அது என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமான விஷயம் ஆகும். நான் திருப்பதியில்தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.
திருமணத்தின் போது நான் என்ன அணிவேன் என்பது எனக்குத் தெரியும். அப்போது நான் தங்க நகைகளையும், காஞ்சிபுரம் சேலையையும் அணிந்திருப்பேன். நிச்சயமாக என்னுடைய தலையில் அதிகமான மல்லிப்பூக்கள் இருக்கும். என்னுடைய கணவர் லுங்கி அணிந்திருப்பார்.
கல்யாணத்திற்கு பிறகு வாழை இலையில் சாப்பிடுவோம். நான் திருப்பதிக்கு அடிக்கடி வந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் என்னுடைய திருமணத்தை இங்கு நடத்த வேண்டும் என்றும் என் அன்புக்குரியவரை இங்கு வைத்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
முன்னதாக என்னுடைய குடும்பத்தினர் பலர் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு அது உண்மையில் பிடித்திருந்தது. எனக்கு பெரிய கல்யாணங்கள் பிடிக்காது. ஒரு பெரிய நிகழ்வு இப்படி பெரிய கவனத்தை பெறுவது கவலையை தரும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்